பக்கம்:வைணவ உரைவளம்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 10 வைணவ உரைவளம் ஈடு ; ஆனாலும் எங்கேனும் போகிலும் இருவரா யல்லதிராது அங்கு, தனியே போன விவள் என்படு: கின்றாளோவென்று மிகவும் நொந்து கூப்பிடுகின்றாள் இவளுடைய திருத்தாயார். ' T S2 உண்ணும் சோறு பருகுர்ே தின்னும்வெற் றிைையுமெல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றென் றேகண்கள் நீர்மல்கி மண்ணினுள் அவன் சீர் வளம்மிக் கவனுரர் வினவி திண்ணம் என்னிள மான் புகு மூர்திருக் கோளுரே2" (மல்கி-பெருகி; மண்ணினுள் - பூமண்டலத் துள்ளே; சீர்-சிறப்பு; வினவி-விசாரித்து: புகும் ஊர்-சேர்ந்த இடம்: திண்ணம் உறுதிர் தாய்ப்பாசுரம்: தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குவதாக அமைந்த திருவாய்மொழியில் ஒருபாசுரம் இது. இதில், உண்ணு' கின்ற சோறும், பருகுகின்ற நீரும் தின்னுகின்ற வெற்றி லையும் எல்லாம் கண்ணனாகிய எம்பெருமான் என்று. என்றே கண்கள் நீராலே நிறைய, பூமி பிலே அவனுடைய கல்யாண குணங்களையும் வளத்தால் மிக்கவனான எம் பெருமானுடைய திவ்விய தேசத்தையும் கேட்டுக்கொண்டு என்னுடைய இளமான் புகும் ஊர் திருக்கோளுர் என்னும் திவ்விய தேசமாகும்; இது நிச்சயம்' என்று திருத் தாயார் கூறுகின்றாள். 27. திருவாய் 6. 7: 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/433&oldid=921250" இலிருந்து மீள்விக்கப்பட்டது