பக்கம்:வைணவ உரைவளம்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 4甘誓 கண்கள் நீர்மல்கி: இவள் மயர்வற மதிநலம் அருளப் பெற்று உலகத்தையெல்லாம் திருத்துகையாலே இவள் திருத்தின நாடெல்லாம் இவள் கண்ணும் கண்ணிருமாக இருக்கும் இருப்பையே தங்களுக்குத் தாரக, போஷக, போக்கியங்களாக நினைத்திருப்பர்கள் என்னும் இடம் தோற்ற இவர்களுடைய உண்ணும்சோறு பருகும்நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் இருக்கிறபடி. இவள் முகத் தாலே காணும் இவர்களுக்கு ஜீவனம். தன் ஜீவனத்துக்குப் போகிறவள் எங்கள் ஜீவனத்தைக் கொண்டு போக வேணுமாமோ? ஒருவன் பகவத் குணங்களிலே ஈடுபட்ட வனாய்க் கண்ணும் கண்ணிருமாயிருக்க, அவனைக் கண்டு கொண்டிருக்கவன்றோ அடுப்பது. சேயரிக்கண், அழுநீர் துளும்ப அலமருகின்றவாழியரோ"2" என்று சேதநராகில் மங்களாசானம் செய்யக் கடவது. கண்ணும் கண்ணிரு மாய் இருக்கிற இருப்பைக் கண்டு கொண்டிருத்தலே புருஷார்த்தம் என்கைக்கு ஈட்டாசிரியர் ஒர் ஐதிகம் காட்டு கின்றார்: "பிள்ளைத்திருநறையூர் அரையரோடே மூன்று திருவாய் மொழி கேட்டேன்; அதில் எனக்கு ஒருவார்த் தையும் போகாது; ஒரு திருவாய்மொழியைச் சொன்ன வுடனே அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ணிருமாய் இருக்கும் இருப்பை நினைத்திருப்பன்' என்று அருளிச் செய்வர் நஞ்சீயர். ஈசுவரனே தாரகபோஷக போக்கியங்கள் எல்லாமாக இருப்பான் என்பதற்கும் ஒர் ஐதிகம் காட்டுவர். அனக் தாழ்வான் சோழ குழாந்தகனிலே பயிர்த்தொழில் செய்து கொண்டிருப்பவனான ஒரு பூரீ வைணவனைக் கண்டு :: உம்முடைய ஊர் எது?' என்று கேட்க, அதற்கவன், என்னுடைய ஊர் திருக்கோளுர் என்ன ஆழிவான், "அங்கு நின்றும் போந்தது என்?" என்று மீண்டும் கேட்க, அவனும் தேகயாத்திரை நடவாமை போந்தேன்" என்ன. 23. திருவிருத்)2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/434&oldid=921251" இலிருந்து மீள்விக்கப்பட்டது