பக்கம்:வைணவ உரைவளம்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 12 வைணவ உரைவளம் அதைக் கேட்ட ஆழ்வான் அவ்வூரில் கழுதையை மேய்த்து ஜீவிக்க மாற்றிலையோ? நிலைநின்ற ஜீவனத்தை விட்டுப் போந்தாயேயன்றோ!' என்றானாம். "புகுமூர் இந்த இடத்து ஈடு ; காட்டுத் தீயிலே அகப் பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாப் போலே சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத்தீயிலே அகப்பட்டவனுக்கு இகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் போலேயிறே. புகுமூர் என்கையாலே புக்கார் புகு மூர் அன்றென்கை' எம்பெருமானார் திவ்விய தேச யாத்திரையாக தெற்கே எழுந்தருளுகையில் திருக்கோளுர் எழுந்தருளா நின்றார்: அப்போது அங்கு நின்றும் வெளியேறுகின்றளோர் அம்மை யாரைக்கண்டு எங்கு நின்றும் புறப்பட்டபடி?’ என்று கேட்க, அதற்கவள், திருக்கோளுரில் நின்றும் என்று மறு மொழிகூற, அதுகேட்டு எம்பெருமானார், அவ்வூரில் புக்க பெண்களும் போகக் கடவராய் இருப்பார்காளா?" என்று அருளிச் செய்தாராம். புகுமூர்' என்ற சந்தையின் சுவடறிந்து அருளிச் செய்தபடி இது. "என் இளமான் மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளுரே... திண்ணம் : இவள் போய்ப்புகும் ஊர் திருக்கோளுரே; இது நிச்சயம். எந்த ஊர் சென்றாள்?' என்பதனை அறியாத இவள் திண்ணம்’ என்கிறது எங்ங்னே? என்ன, அதற்கு விடையாக, *இவ்வூரில் பெண் பிள்ளைகள் காணாவிட்டால் கோயி லுக்குள் தேடுமத்தனை அன்றோ?' T 93 மேவி கைந்து ருைந்துவிளை யாடலுற்றாள் என்சிறுத் தேவி, போய், இனித் தன்திரு மால்திருக் கோளுரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/435&oldid=921252" இலிருந்து மீள்விக்கப்பட்டது