பக்கம்:வைணவ உரைவளம்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 * 4 வைணவ உரைவளம் இடமாட்டாதே கண்களாலே பருகுவாரைப்போலே பார்த்து வாழ்ந்து கொண்டு போகிறபடியைப் பின்னே நின்று கண்டு அநுபவித்தேன்' என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்.

  • ஐதிகம் இரண்டு : ஆச்சானும் ஆண்டானுமாகக்" கிழக்கே நடக்கின்றபோது, திருப்பேர் நகருக்குக் கிழக்குப் போகவும் மாட்டாதே, ஏறித் திருவடி தொழவும் மாட்டாதே, திருப்பேர் நகரான் கோயிலைப் பார்ததுக் கொண்டு இருந்தார்களாம்".

ஆவி உள்குளிர': இவ்விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே மேல் எழ அருளிச் செய் தாராய், அங்கே இருந்தவரான சீராமப்பிள்ளை' சீயா, எம்பார் அருளிச் செய்யும்போது ஆவி உள்குளிர' என்று முகந்துகொண்டு அருளிச் செய்யும்படி கேட்டறிகை இல்லையோ?" என்று அருளிச்செய்தார். ஆவி உள் குளிர' என்று சந்தையை மேலெழுந்த வாரியாகச் சொல்லி 30. ஆச்சான் -கிடாம்பி ஆச்சான்: ஆண்டான் முதலியாண்டான். 31. சீராமப்பிள்ளை - பட்டருடைய திருத்தம்பியார். 'சீயர் என்பது பூஜ்யவார்த்தை. திருத்திய குணத்தினால் இறைஞ்சிச்சீய என்று மேருமந்தர புராணத்து வரும் தொடருள் (638) இப்பொருளில் இச்சொல் வழங்குதல் ஈண்டு அறியத்தகும். இப்பெயர் வைணவ சந்நியாசிகட்குச் சிறப்புப் பெயராக வழங்குகின்றது. ஆனால், முற்காலத்தே இப்பெயர் சிவாசாரியரான பிராமணர்கட்கும் பயின்று வந்தது என்பது, சோள கி மடத்து ஜீயர் சந்தானம் புஷ்பசிரிpயர், ஜீயர் விசு வேசுவர சிவாசாரியர்' என்ற சாசனத் தொடர் sorrow Q.5%fourth. )M.E.R. 564 of 1916 S.I. I. vi —p. 193, புதுக்கோட்டைச்சீமைச்சாசனத் தொகுதி பக்.111). எம்பார்- பட்டருடைய ஆசாரியர்; எம்பெருமானாருடைய சீடர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/437&oldid=921254" இலிருந்து மீள்விக்கப்பட்டது