பக்கம்:வைணவ உரைவளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 1 5 உடையாய் என்பதால் சுவாமித்துவமும், "என்னை ஆள் வானே என்பதனால் செள சீல்யமும், கிகளில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே என்பதால் செளலப் பியமும் தெரிவதாகப் பெரியோர் பணிப்பர் (பாசுரம்-202 காண்க). தமிழின் ஏற்றம் : கீதையைக் காட்டிலும் திருவாய் மொழி உயர்ந்தது என்பதற்கு ஒர் ஐதிகம் காட்டுவர் ஈட்டாசிரியர். கீதையைக் கற்றான் ஒருவன் காலை நேரத்தில் ஒரு சபைக்குச் சென்றால் பலருமாக நாழி அரிசியைக் கொடுத்து நம்ப மாட்டாமையாலே புறத் திண்ணையிலே கிட என்பார்கள் என்றும், திருவாய் மொழியைக் கற்ற ஒரு விண்ணப்பம் செய்வான் சென்றால், *சர்வேசுவரன் அகப்படப் புறப்பட்டு எதிர் கொண்டு அகம் ஒழித்துக் கொடுத்து அமுதுபடியும் எடுத்துவிட்டு உபசரிப் பார்கள்' என்றும் நம்பி திருவழுதி நாடுதாசர் கூறுவாராம் (பாசுரம்-250 காண்க). இதனால் வடமொழியைக் காட்டி லும் தமிழுக்கு ஏற்றம் உண்டு என்பதாகக் கருதுபவர் உரையாசிரியர்கள் என்று கொள்ளலாம். சில வைணவ மரபுகள் : இவற்றையும் ஈண்டு அறிந்து கொள்ளல் நலம். (i) ஈசுவரன் திருமேனி : கருடனுடைய உடலாய் நிற்கும் வேதத்தின் பொருளாய் நிற்பவன். இவன் திருமேனியில் சீவன் இரத்தினங்களுள் சிறந்த கெளஸ்துப மாகவும், மூலப் பிரகிருதி பூரீவத்ஸ்ம் என்னும் மறுவாகவும், மான் என்னும் தத்துவம் கெளமோதகி என்னும் கதையாக வும், ஞானம் நந்தகம் என்னும் வாள் (கத்தி) ஆகவும், மருள் வாளின் உரையாகவும், தாமசாகங்காரம் சார்ங்கம் என்னும் வில்லாகவும், சாத்விகாகங்காரம் பாஞ்ச சன்னியம் என்னும் சாங்காகவும், மனம் சுதர்சனம் என்னும் சக்கர மாகவும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய பத்தும் அம்புகளாகவும், தந்மாத்ரங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/44&oldid=921257" இலிருந்து மீள்விக்கப்பட்டது