பக்கம்:வைணவ உரைவளம்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 419 'கண்ணாரக் கண்டு, கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே'3", காண்பதற்கு முன்பும் உறக்கம் இல்லை; கண்டாலும் காதல் மிகுதியால் உறங்குவ தில்லை; நிதியானது சித்தாஞ்சனம் அணிந்த சில பாக்கிய சாலிகட்கே கிடைக்கும்; எம்பெருமானும் பக்தி சித்தாஞ் சனம் பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்கியசாலி கட்கே கிடைப்பன். நிதியுடையவன் மார்பு நெறிப்பன்; எம்பெருமானைக் கைக்கொண்டவர்களும் எனக்கு ஆரும் நிகரில்லையே'3" மாறுளதோ இம் மண்ணின் மிசையே 40 இல்லையெனக் கெதிரில்லை யெனக், கெதிரில்லையெனக் கெதிரே'41 என்று செருக்கிப் பேசுவார்கள். நிதி படைத்தவனை உலகமெல்லாம் போற்றிப் புகழும். எம்பெருமானைக் கைக்கொண்டவர்களையும் அறிஞர் புகழ்வர். நிதியை இழந்தவன் கதறி யழுவன்; எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. சீராமனாகிய வைத்தமா நிதியை இழந்த பரதாழ்வான் சபையில் கதறி யழுதா னன்றோ? பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி, அழுதேன்'42 இன்பத்தை இழந்த பாவியேன் என தாவி நில்லாதே"43 எழில்கொள் நின் திருக்கண்ணின் நோக்கத் தன்னையும் இழந்தேன் இழந்தேன் இழந்தேன் இழந் தேனே'44, உன்னைக் காண்பான் நான் அலம்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன்'4, என் சொல்லிப் புலம்பு 38. திருவிருத். 97. 39. இராமா. நூற். 47 40. திருவாய் 6.4:9 41. பெருந்தொகை-1838, 42. முதல். திருவந். 16 43. பெரு, திரு, 7:4 44: டிெ. 7: 7 43. திருவாய், 3.8:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/442&oldid=921260" இலிருந்து மீள்விக்கப்பட்டது