பக்கம்:வைணவ உரைவளம்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 வைணவ உரைவளம் வனே4 என்று இப்படி யெல்லாம் கதறி யழுவார்கள். எம்பெருமானுடைய சிந்தனையை இழந்து ஒரு கணப் பொழுது கழியப் பெற்றாலும் கள்வர் எல்லாச் சொத்து களையும் கொள்ளை கொண்டால் எப்படிக் கதறி யழக் கூடுமோ அப்படிக் கதறி அழவேண்டும் என்பர். T 96 பொன்னுல காளீரோ புவனிமுழு தாளிரோ கன்னலப் புள்ளினங்காள் வினையாட்டியேன் நானிரந்தேன் முன்னுல கங்களெல்லாம் படைத்தமுகில் வண்ணன் கண்ணன் என்னலங் கொண்டபிரான் றனக்கெங்கிலை மையுரைத்தே:4" மகள் பாசுரம் : திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடுவதாக அமைந்த திருவாய்மொழி யில் முதல் பாசுரம். இதில், "சிறந்த குணங்களையுடைய பறவைக் கூட்டங்களே! தீவினையேனாகிய நான் உங்களை இரக்கின்றேன்; ஆதிகாலத்தில் எல்லா உலகங்களையும் படைத்த முகில் வண்ணனும் கண்ணபிரானும் என்னுடைய நலத்தையெல்லாம் கொண்ட உபகாரகனுமான எம்பெரு மானுக்கு, என்னுடைய நிலையைச் சொல்லுங்கோள்; அவ்வாறு சொல்லி, நீங்கள் செய்த உதவிக்குக் கைம் மாறாகப் பரமபதத்தையும் மற்றுமுள்ள எல்லா உலகங் களையும் நான் கொடுக்க நீங்கள் ஆளுங்கோள்' என்கின் றாள் பராங்குச நாயகி, 46. திருவிருத். 86. 47. திருவாய். 6.8.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/443&oldid=921261" இலிருந்து மீள்விக்கப்பட்டது