பக்கம்:வைணவ உரைவளம்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 வைணவ உரைவளம் அடியார்க்குக் கிருபையாலே பவ்யனாக இருப்பான் என்ப தற்குக் காட்டும் சம்வாதம் : "ஒ வானரங்கட்குத் தலைவ னான சுக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபகரித்தவனைத் தன்னைக் கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக்கொள்ள வேணும் என்பது சொல்லவும்.வேணுமோ?',' என்ற இடத்தில் சொல்லுவது ஒரு வார்த்தை உண்டு. அது: அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, திருவுள்ளத்தில் ஒடுகிறது என்?" என்ன: ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண் படுத்தியபடி என்1 என்று கிடந்தேன் என்றார் என்பது. இதற்குக் கருத்தாக நம் பிள்ளை அருளிச் செய்யும் வார்த்தை: நாம் பண்ணின சரணாகதி ஆகையாலே, பலத்தோடு அவ்யபிசாரியாகமாட்டாது; 2 இனி சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒரு குறை இல்லை என் கிறது" என்பது. அதாவது, வேடுவனது சரணாகதி ஆறு கூல்யாதிகளால் அன்றிக்கே சரண்யமான புறாவினது குணாதிக்யத்தாலே பலம் சித்தித்து போன்று, நம்முடைய ஆதுகூல்ய சங்கல் பாதிகளன்றிக்கே சரண்யனான சர்வேசு வரனுடைய குணாதிக்யத்தாலே பலிக்கும் என்பது. 'பேடையைப் பிடித்துத் தன்னை பிடிக்கவந் தடைந்த பேதை வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப் பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம்புள் வீடுபெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ?' -கம்பரா. யுத்த. வீடணன் அடைக்-112 51. பூரீ ராமா. யுத்த. 18:25. மேலும், 52. அவ்யபிசாரியாக மாட்டாது - புலத்தோடே கூட்டுவிக்க மாட்டாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/447&oldid=921265" இலிருந்து மீள்விக்கப்பட்டது