பக்கம்:வைணவ உரைவளம்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 வைணவ உரைவளம் தும் மிகப் பல நாட்களாக உயிர்களைக் காப்பாற்றுகின்ற வனே, அழகிய பெரிய பிராட்டியாரோடு சேர்ந்திருக்கின்ற உன்னை அடியேன் அடையாமல் மிகப் பல நாட்கள் இன்னம் தளர்வேனோ?' என்கின்றார் ஆழ்வார்.

  • ஞாலத்துடே கடந்தும் : 'இராமாவதாரத்தில் காட் டிலே நடையழகு காட்டினாய்: குருடர் முன்னே நடக்குமா போலே யன்றோ5 ஆயிற்று அது? நடையழகு காண விரும்பியிருக்கும் என் முன்னே நடந்தாலாகாதோ?' என்பது உட்கருத்து.

இங்கே ஈட்டில் ஓர் ஐதிகம் : அடியார்க்காக நடந்து வந்ததற்கு ஒர் ஐதிகம் காட்டுகின்றார். வடநாட்டி னின்றும் போரப் பாடவல்லராயிருப்பவர் ஒருவர், பெருமாளைத் திருவடி தொழ வேணும்' என்று வர, ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் தீர்த்தத்தின் அன்று இருந்து55 திருமாலையை பாடிச் சமைந்து5' பெருமாளை மத்தகஜங்களை ஏத்துமாறு போலே ஏத்தி 54. மூடர்முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ ஆடெடுக்த தென்புலியூர் அம்பலவா-ஏடாகேள் செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித் தென்னபயன்? அந்தகனே நாயகன் ஆனால் . என்ற பாடல் ஈண்டு நினைக்கத் தகும். 55. தீர்த்தவாரியின் அன்று இருந்து 56. தொண்டரடிப் பொடியாழ்வார் அ ரு ளி ய பிரபந்தம். 57. பாடி முடித்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/449&oldid=921267" இலிருந்து மீள்விக்கப்பட்டது