பக்கம்:வைணவ உரைவளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 வைணவ உரைவளம் ஐந்தும் பூதங்கள் ஐந்தும் ஆகிய இருவித பூதங்களின் வரிசை யும் வனமாலையாகவும் இப்படி எல்லாத் தத்துவங்களும் எம்பெருமானுக்கு ஆயுதமாகவும் ஆபரணமாகவும் இருப்ப தாகக் கருதுவது வைணவ மரபு'. அதாவது எம்பெருமான் சேதநம் அசேதநம் என்னும் தத்துவங்கள் அனைத்தையும் ஆபரணமாகவும் ஆயுதமாகவும் கொண்டுள்ளான். பகவானுடைய ஆபரணங்கள் 'திவ்யாபரன ஆழ்வார்கள், என்னும் திருநாமத்தால் வழங்கப்பெறும். உலகிலுள்ள மற்ற ஆபரணங்களுக்கில்லாத மென்மை, மணம், அழகு' ஒளி முதலியன இவ்வாபரணங்களுக்கு உண்டு. சங்கு, சக்கரம் முதலிய ஆயுதங்கள் பகவானை வெறுத்து நிற்பவர் கட்கு ஆயுதங்களாகவும், விரும்பி நிற்பவர்கட்கு ஆபரணங் களாகவும் தோன்றும். ஆபரணங்களுக்கு எங்ங்னம் தோற்றம், அழிவு முதலிய குற்றங்கள் இல்லையோ, அங்ங்னமே ஆயுதங்களுக்கும் இவை இல்லை. நித்திய சூரிகளே திவ்யாபரணாழ்வார்கள், திவ்வியாயுதாழ்வார்கள் எனப் பெயர் பெற்றுள்ளனர். இவை பகவானுடைய ஆயுதங்கள் என்னும் நிலைக்கேற்ப ஞானம், சக்தி முதலிய திருக்குணங்களைப் பெற்றுள்ளன. (iii) நம்மாழ்வாரின் திருமேனி : ஆழ்வார்கள் பன்னிருவருள் சடகோபர் 'கம்மவர்" என்று போற்றத்தக்க பெருமை வாய்ந்து நம்மாழ்வார் என்ற சிறப்புத் திருநாமத் தால் வழங்கப்பெறுகின்றார். ஏனைய ஆழ்வார்களை நம்மாழ்வாரின் ஒவ்வோர் அவயமாகவும், நம்மாழ்வாரை அவயவியாகவும் வழங்குவது மரவு. ஆழ்வாரின் திருமுடி நம்பெருமாள். பூதத்தாழ்வாரைத் தலையாகவும், பொய்கை பேயாழ்வார்களைத் திருக்கண்களாகவும், பெரியாழ்வாரைத் திருமுக மண்டலமாகவும், திருமழிசை யாழ்வாரைக் கழுத்தாகவும், குலசேகராழ்வாரையும் திருப் பாணாழ்வாரையும் திருக்கைகளாகவும், தொண்ட ரடி 13. தே. பி. 80.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/45&oldid=921268" இலிருந்து மீள்விக்கப்பட்டது