பக்கம்:வைணவ உரைவளம்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 427 வசமாக்கிக் கணிசம் கொண்டு : நாயனதே! தேவt திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவன் தேவரைத் திருவடி தொழ நெடுந்துாரமுண்டு வந்திருக்கிறது; இவனை அழைத்துக் கொண்டு சம்பாவனை பண்ணியருள வேணும்' என்ன, பெருமாளும் அப்படியே செய்கிறோம் என்று திருவுள்ளமாய் அருளப் பாடிட்டு, திருப்புன்னைக் கீழ் நின்றும், அவர் நின்றவிடத்தளவும் செல்ல நாலுக்கோல் தறை திருக்கைத் தலத்தே எழுந்தருளி, விண்ணப்பம் செய் வார்களை எல்லாம் அருளப் பாடிட்டு வாரீர் கோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்த தரம்?' என்று திருவுள்ளமானார். ዝ 99 ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவி யேனைப் பலரீ காட்டிப் படுப்பாயோ? தாவி வையம் கொண்ட தடங்தா மரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ...' (ஆ.வி-மனம்; திகைக்க-கலங்கும் படியாக: ஐவர்-பஞ்சேந்திரியங்கள்; குமைக்கும்பீடிக்கப் படியான; காட்டி-காண்பித்து: படுப்பாயோ-முடிக்க நினைக்கின்றாயோ; வையம்-பூமி, தாவி-அளந்து: கூவிக் கொள்ளும்- அழைத்துக் கொள்ளும்; குறு காதோ-நெருங்காதோ, T55. சபதம் கொண்டு. 59. திருவாய். 6.9:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/450&oldid=921269" இலிருந்து மீள்விக்கப்பட்டது