பக்கம்:வைணவ உரைவளம்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ቆ 3ዕ வைணவ உரைவளம் தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்து மாறு புணராயே.."2 (ஆஆ என்னாமல்-இரக்கமின்றி, அலைக்கும்இம்சிக்கும்; வாழ்நாள்-ஆயுள்; தீவாய்நெருப்பை உமிழும்; வாளி-அம்பு; சிலைவில்; கேள்வா-கொழுநனே; சுரர்கள்தேவர்கள்; பூ ஆர்-பூக்கள் நிறைந்த; பொருந்தும் ஆறு-கிட்டும்படி; புணராய்கற்பித்தருள வேண்டும்) திருவேங்கட முடையானது திருவடிகளில் சரணம் புகுவதாக அமைந்த திருவாய்மொழியில் ஒரு பாசுரம், ஜயோ, ஐயோ' என்று இரங்காமல் உலகத்தி லுள்ளாரை வருத்துகின்ற அரக்கர்களுடைய வாழ்நாளின் மேலே, நெருப்பினை வாயிலேயுடைய அம்புகளை மழையைப் போன்று பொழிந்த வில்லையுடையவனே! திருமகள் கேள்வனே தேவனே தேவர்களும் முனிவர் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம்பெருமானே! போக்கற்கரிய வினைகளை யுடைய அடியேன், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பொருந்துமாறு கற்பிக்க வேண்டும்' என்கின்றார் ஆழ்வார். "பொருந்துமாறு புணராயே' என்றதில் நோக்காக அவதாரிகை அருளிச் செய்கின்றார் நம்பிள்ளை * உன்னைப் பெறுகைக்கு உடலாக நீ சாத்திரங்களில் காட்டிக் கொடுத்த சாதனங்களொன்றும் எனக்குப் பயன் படவில்லை; ஆன பின்பு, உன்னை அடைவதற்கு எனக்கு என்னத் தனியே ஒரு சாத னம் கண்டு தரவேண்டும்' 62. திருவாய். 6.1014

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/453&oldid=921272" இலிருந்து மீள்விக்கப்பட்டது