பக்கம்:வைணவ உரைவளம்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 43 i என்கின்றார். தனியே ஒரு சாதனம் கண்டு தர வேணும்' என்றதற்குக் கருத்து என்ன? நான் செய்த பாவங்கட்கு நீ வைத்துள்ள நரகங்கள் போரா; எனக்கு என்று ஒரு நரகம் கல்பிக்க வேண்டும் என்றால், உண்டாக்க வேண்டும் என்பது ஈண்டு பிரார்த்தனை அன்று காண். அருட்பெருங் கடலாய் பேராற்றலையுடையவனான நீ அதனைப் போக்க வேண்டும் என்பது கருத்தாமாறு போன்று, சித்தோபாயமான நீயே காக்க வேண்டும் என்பது ஒன்றும் உடலாகின்றன இல்லை என் கையாலே, கர்ம ஞான பக்திகள் போன்று, சித்தோபாயமும் சாதன மன்று என்று தோற்றினாலும், சிந்தோ பாயமான நீயே விரைவில் செய்ய வேணடும்" என்று பதற்றம் சொல்லுகின்றது. இந்த விளக்கத்தில் ஈட்டில் ஓர் ஐதிகம் அருளிச் செய்யப் பெற்றுள்ளது. நம்பிள்ளை நஞ்சீயரை ஒருநாள், பஞ்சமோ பாயம் என்று ஒன்று உண்டு' என்று கொல்லா நின்றார்கள்; நாட்டிலேயும் அங்ங்னே இருப்பது ஒன்று உண்டோ?" என்று கேட்டருள, அதற்கு அவர், நான் அறிகிலேன்: இனி நான்காவது உபாயமான ஈசுவரனை யொழிய வேறு உபாயம் இல்லை; ஆகாயம் என்று கூறப்படுகின்ற நாராயணனுக்கு அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லு வாரைப்போல அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு’ என்னைய நான் கேட்டறியேன்” என்று அருளிச் செய்தார்." இந்த விதமாக நஞ்சீயர் கம்பிள்ளைக்கு அருளிச் செய்த போது பின்னையும் நம் பிள்ளை கேட்டாராம்- இப்படி 03. இந்த பூர் சூக்திகளைக் காணுமவர்களுக்கு ஒர் ஐயம் தோன்றும்; ஆசாரியபிமானம் ஐந்தாவது உபாயமென்று பூர் வசன பூணாதிகளில் பிரசித்த மாக இருக்க, அதற்கு மாறாக நஞ்சீயர் அருளிச் செய்தாப்போலே தெரிய வருகின்றதே, இஃது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/454&oldid=921273" இலிருந்து மீள்விக்கப்பட்டது