பக்கம்:வைணவ உரைவளம்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 வைணவ உரைவளம் யானால் ஆவா வென்னா' என்கின்ற பாசுரம் அருளிச் செய்யும் போது எனக்குத் தனியாயொரு சாதனம் கண்டு தர வேண்டுமென்கிறார்" என்று தேவரீர் அருளிச் செய்வ துண்டே, அஃது எங்ங்னம்?' என்று. அதற்கு நஞ்சீயர் அருளிச் செய்த விடையாவது-நான் அங்ங்னே சொன்ன தற்குத் தாத்பரியம் கேளாய், எம்பெருமானே, நீ இருக்கும் போது நான் இங்கனே இழக்கலாகுமோ? சித்தோபாயமும் தட்டுப்படலாகுமோ?" என்று வெறுத்துச் சொல்வது மாத்திரமே தாத்பரியம்' என்று. அதாவது, வேறோர் உபாயம் கண்டு தர வேண்டும் என்று கேட்கிறார் அல்லர் என்பது அறியத் தக்கது. நான்காவது உபாயம் ஈசுவரன் என்றார் மேல்; ஆனால் பிரபத்தியினால் காரியம் இல்லையோ? என்கிற ஐயத்தைப் போக்குவதற்காக ஒர் ஐதிகம் காட்டுகின்றார்: நஞ்சீயர் ரீபாதத்திலே அடைந்த ஒருவன், எம்பெரு என்ன?’ என்று. (இதற்குச் சமாதானம்) ஆசார்ய பிமானம் சுதந்திர உபாயமானாலும் அது சித்தோபாயத்திற்குள்ளேயே அந்தர்ப் பூதமாக நினைக்கத் தக்கது. :ஈசுவரனைப் பற்றுகை கையைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோ பாதி: ஆசார் யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார் யங் கொள்ளுமோ பாதி (புரீ. வசன-430) என்ற திவ்விய சூக்தியை நன்கு நோக்குமளவில் இவ்விஷயம் ஆழ்ந்து தோன்றும். ஆகவே ஆசார்ய பிமானம் என்பது சித்தோபாயத்திலேயே செருகி நிற்கும். இதை ஐந்தாவது உபாயமென்று சொல்லி யிருந்தாலும் காரியம் செய்யும் விஷயத்தில் இது அமோகமானது' என்பதைத் தெரிவிப்பதிலேயே அது பர்யவளித்து நிற்குமத்தனை (பி.ப. ஆண்ணங்கராசார்ய சுவாமிகளின் திருவாய் மொழி-திவ்வியார்த்த தீபிகை காண்க).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/455&oldid=921274" இலிருந்து மீள்விக்கப்பட்டது