பக்கம்:வைணவ உரைவளம்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 433 மானே உபாயமாகில் சரணாகதி கொண்டு இங்குச் செய் கிறது ஒன்று கண்டிலேன்' என்ன, அதனைக் கேட்ட சீயர் செவியைப் புதைத்து நாதமுனிகள் தொடங்கி இன்றளவும் வர நம் ஆசார்யர்கள் பரம இரகசியமாக உபதேசித்து ஒராண்வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மகாபாபியேன் இதனை வெளி யிடுவதே! என்று திருமுடியிலே அடித்துக் கொண்டு திருப் பள்ளியறையிலே ' புக்கருளினார். ஆனால் அவர் கேட்டதற்குப் பரிகாரம் யாது என்ன, அதற்கு அருளிச் செய்த விடை: திவ்விய மங்கள விக்கிரக மும் விக்கிரக குணங்களும் திவ் வியாத்ம சொரூப குணங் களும் நித்திய முக்தர்கட்குப் பிராப்யமானாற் போலே, முமுட்சு வாய்ப் பிரபந்நனான இவ்வதிகாரிக்குச் சரணா கதியே பிராப்பியமாய் இருக்கும் அன்றோ? ஆஆ என்னாது': ஈசுவரனுக்குப் பிரியம் செய்கை யாகிறது, அவன் விபூதியில் கிருபை செய்தலாகும். *ஒருவனுக்குப் பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்க முடியாத தன்மை வந்ததாகில், நமக்கு பகவத் சம்பந்தம் உண்டு" என்று அறுதியிடலாம்; அது தக்கது' என்றிருந்தா னாகில் நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை' என்று தனக்கே கைவாங்க அமையும்' என்று அருளிச் செய்தார். ‘பூவார் கழல்கள் : திருவேங்க முடையானின் திருவடிக்குப் பூவார் கழல்கள்' என்றும் அழகிய மணவாள, னுடைய திருவடிக்கு திருப்பொலிந்த சேவடி (பெரியாழ். 64. திருப்பள்ளியறையிலே புக் கதற்குக் கருத்து: துக்கத்தையுடைய ஒருவன் ஆப்த பந்து உள்ள இடத்திலே போமாறு போலே போனார் என்பது. அன்றிக்கே, இவனுக்கு நல்ல புத்தியைக் கொடுப் பதற்குப் பிரார்த்திக்கப் போனார் என்னுதலு மாம். திருப்பள்ளியறை-பெருமாளது. வை,-28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/456&oldid=921275" இலிருந்து மீள்விக்கப்பட்டது