பக்கம்:வைணவ உரைவளம்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 வைணவ உரைவளம் திரு. 5.4:7) என்றும், கச்சிநகர் தேவப் பெருமாளுடைய திருவடிக்குத் துயரறு சுடரடி" (திருவாய் 1.1:1) என்றும் சம்பிரதாயத் திருநாமம் எனப் பெரியோர் வழங்குவர். 2 Ο Τ. அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே! கொடியா அடுபுள் உடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே! செடியார் வினைகள் தீர்மருந்தே! திருவேங் கடத்தெம் பெருமானே! கொடியார் பொழுதும் உன்பாதம் காண கொலாது ஆற்றேனே." (மேவி-கிட்டி: அடுபுள்-பகைவரைப் பொசுக்கும் பறவை (கருடன்); கோலம்-அழகிய; செடி ஆர்-செடி போல் செழித்த பாதம்-திரு வடிகள்; நொலாது-ஒரு நோன்பும் அநுட்டி யாது; நொடி-கண நேரம்; நொடித்தல்இரண்டு விரல் நுனிகளைச் சேர்த்துத் தெறித் தல்) திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுவ தாக அமைந்த திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், அடியேன் அடைந்து அநுபவிக்கின்ற அமுதே ! நித்தியசூரிகளுக்குத் தலைவனே! பகைவர்களைக் கொல்லு கின்ற கருடனைக் கொடியில் உள்ளவனே! அழகிய கோவைக் கனிபோன்ற திருவாயினையுடைய பெருமானே! துாறு மண்டிக் கிடக்கின்ற தீவினைகளைத் தீர்க்கின்ற wo 75. திருவாய்.6.10:6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/457&oldid=921276" இலிருந்து மீள்விக்கப்பட்டது