பக்கம்:வைணவ உரைவளம்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 வைணவ உரைவளம் கைக்கொண்டு நோக்குவதே! என்று வெறுத்து, தேவ ரீரையும் நாய்ச்சிமாரையும் நெடுங்காலம் சுமந்து கொண்டு திரிந்தேன்; நான் என் பெற்றேன்" என்றானன்றோ? இதிலே சம்சார ஸ்வபாவம் இருக்கும்படி.." இங்குக் குறிப்பிட்ட கதை: தேவேந்திரனுக்கு நண்பனும் மந்திரியும் சாரதியுமான மாதலி அழகிலும் குணத்திலும் மிகச் சிறந்த தன் மகள் குணகேசி என்னும் கன்னிகைக்குத் தக்க வரனைத் தேடுவதற்குப் புறப்பட்டான். வழியில் நாரத முனிவரைச் சந்தித்து அவரைத் துணையாகக் கொண்டு பல வுலகங்களிலும் சென்று பார்த்தும் தக்க வரன் கிடைக்கவில்லை. பாதாளத்தில் வாசுகியால் ஆளப்படு கின்ற போகவதி என்னும் சிறந்த நகரத்தை அடைந்து அங்கிருக்கும் பல இளைஞர்களைப் பார்க்கும்பொழுது சுமுகன் என்னும் நாககுமாரனை நோக்கி அவனுடைய உருவ எழிலில் ஈடுபட்டு அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கக் கருதினான். கருதினவன், அவனது பாட்டனாரைக் கண்டு பேச அவர் மகிழ்ச்சியோடு துயரங் கொண்டவராய் இவனது தந்தையைக் கருடன் இரையாக்கிக் கொண்டான், இந்த சுமுகனையும் ஒரு திங்களுக்குள் உண்பதாகச் சொல்லி யிருக்கின்றானாதலால் இவனுக்கு மணஞ் செய்தல் ஏற்றதன்று' என்று தெரிவித் தார். அது கேட்ட மாதலி, என்னால் மருமகனாக வரிக் கப்பட்ட உனது பேரன் எங்களுடன் வந்து தேவேந்திர னைக் காண்பனாயின் அவனுக்கு ஆயுளைத் தந்து கருடனைத் தடுக்க முயல்வேன்' என்று சொல்லிச் சுமுகனை அழைத்துக்கொண்டு இந்திரனிடம் சென்றான். அங்கு இந்திரனுடன் உபேந்திரமூர்த்தியான திருமாலும் வீற்றிருக் கையில், நிகழ்ந்தவற்றை யெல்லாம் நாரத முனிவர் சொல்லக் கேட்ட திருமால் இந்திரனை நோக்கி இவனுக்கு அமிர்தத்தைக் கொடுக்கலாம்; அதனால் இவர்கள் விருப் பத்தை அடைந்தவராவர்' என்று சொல்லியருள, இந்திரன் கருடனது பராக்கிரமத்தை ஆலோசித்துத் திருமாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/465&oldid=921285" இலிருந்து மீள்விக்கப்பட்டது