பக்கம்:வைணவ உரைவளம்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 445 நிற்கின்ற நம் போன்றார் சொன்னால் சுவை இராது என்ப தனை ஆப்தவாக்கியத்தால் காட்டுகின்றார் ஈட்டாசிரியர். பட்டர் இத்திருவாய்மொழி அருளிச் செய்யும்போது எல்லாம், ஆழ்வார்க்கு ஓடுகிற நிலை அறியாதே அவ ருடைய உள்ளக்கிடையும் இன்றிக்கே இருக்கிற நாம் என்ன சொல்லுகின்றோம்?' என்று திருமுடியிலே கையை வைத்துக் கொண்டிருப்பர்.

இவள்திறத்தில் நீர் என் செய்யக் கடவீர்?' என்ப தற்கு இரண்டு ஜதிகங்கள் காட்டப்பெறுகின்றன.

ஐதிகம்-1 : ஆண்டாள்" ஒருநாள் ஆழ்வானுக்குப் :பிள்ளைகள்' திருமணம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்; இவ்விடை யாட்டம் ஒன்றும் ஆராயா திருக்கிறது என்?' என்று திருச்செவி சாத்த, ஆழ்வானும், :பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச் சொல்லுகின்றனையோ? நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள, அங்கே வரக் காட்டு' என்றார். ஆண்டாளும் அங்ங்னமே பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போக விட்டாள்; ஆண்டானும் வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நின்றார். பெருமாளும் ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே" என்று திருவுள்ளமாக, ஆண்டானும் இவர்கள் திருமணம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்று தின்றார்கள்' என்று விண்ணப்பம் செய்தார். பெருமாளும் எல்லாம் செய்கி றோம்' என்று திருவுள்ளமானார். பிற்றை நாளே மன்னியைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். 6. இவள் கூரத்தாழ்வானின் திருத்தேவியார். 7. பட்டரும் சீராமப் பிள்ளையும். 8. இச்சொல் (மன்னி) பல இடங்களில் வந்துள்ளது: இது கன்னி அல்லது பன்னி' என்றிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/468&oldid=921288" இலிருந்து மீள்விக்கப்பட்டது