பக்கம்:வைணவ உரைவளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வைணவ உரைவளம் யுறங்கா வில்லிதாசரை நிழலாகவும்-இங்ங்னம் இராமாது சரைச் சர்வாசார் ய சொரூபராகக் கொள்வது மரபு. கோயில், திருமலை, பெருமாள் கோயில் : திருவரங்கத்து அழகிய மணவாளன் இராமாவதாரக் கூறுடையவன் (தோலாத தனி வீரன் தொழுத கோயில்) என்றும், திருவேங்கடத்துத் திருவாழ்மார்பன் (சீநிவாசன்) கண்ணன் அவதாரக் கூறுடையவன் (கண்ணன் அடியினைச் காட்டும் வெற்பு) என்பதும், அத்திகிரி அருளாளன் இந்த இரண்டு அவதாரக் கூறுகளையுடையவன் என்பதும் வைணவர்க வளிடையே வழங்கி வரும் கருத்துகளாகும்.' திருக்கோவில் அமைப்பில் : திருக்கோவில் அமைப்பில் சில தத்துவங்கள் விளக்கம் பெறுவனவாக உள்ளன. (i) திருவரங்க விமானம் ஏழு திருச்சுற்றுகளுக்கும் நடுவில் உள்ளது; பிரணவ ஆதாரமாயுள்ளது. நான்கு திருமறைகளும் சாத்திரங்களும் துரபிகளாயுள்ளன. பரவாசுதேவர் இதிலிருந்து சேவை சாதிக்கின்றார். ஓம்: என்ற பிரணவம் விமானமாகவும், நமோ நாராயணாய என்பதிலுள்ள ஏழு எழுத்துகள் ஏழு திருமதில்களாகவும் அமைந்துள்ளன. எட்டெழுத்து மந்திரத்தை ஆராய் பவருக்கு இறைவனின் தன்மை புலப்படுவது போல திரு அரங்கத்திற்குச் செல்பவர்கட்கும் இறைவன் நேரே புலனா வான் என்பது கருத்து. விமானத்தின் முன் பகுதியில் நிற்பது காயத்திரி மண்டபம்', விஷ்ணு காயத்திரி மந்திரத்தின் அறிகுறியாக 24 தூண்களால் அமைக்கப்பெற்றது (24 தத்துவங்களின் அறி குறியாக இருப்பனவாகவும் கருதலாம்). 14. gs. a. ai, 32, 83. 15. திருவரங்கத்து மாலை.95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/47&oldid=921290" இலிருந்து மீள்விக்கப்பட்டது