பக்கம்:வைணவ உரைவளம்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 வைணவ உரைவளம் சுகம்-பேரின்ப வெள்ளத்தையுடைய, குழாம் -கூட்டம்; அறா-நீங்காமல் இருக்கும்! மகள் பாசுரம் : தாய்மாரும், தோழிமாரும், உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரெயில் சேரத் துணிவதைக் கூறும் திருவாய்மொழியில் ஒரு பாசுரம்; இதில் ஆழ்வார் நாயகி, தாய்மார்களே! வெண்ணிறத்தையும் உள்சுரிந் திருத்தலையு முடைய பாஞ்ச சன்யம் என்னும் சங்கோடு சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் ஏந்திக்கொண்டு தாமரைக் கண்ணனான எம்பெருமான் என் மனத்திற் குள்ளே கருடப் பறவையைச் செலுத்துகின்ற விதத்தைக் காணுங்கோள்; அவன் தன்மையை என்ன வார்த்தைகளைக் கொண்டு உங்களுக்குச் சொல்லுவேன்; பேரின்ப வெள்ளத்தையுடைய எம்பெருமான் எழுந்தருளியிருக் கின்ற, வேதங்களின் ஒலியும் திருவிழாக்களின் ஒலியும் நீங்காமல் இருக்கின்ற திருப்பேரையில் என்ற திவ்விய தேசத்தை நான் அடைவேன்' என்கின்றாள். வெள்ளைக் சுரிசங்கொடு ஆழி ஏந்தி திவ்விய ஆயுதங் களை முன்னே கூறுவதற்கு, பாவம் அருளிச் செய்கின்றார். தவள ஒண் சங்கு சக்கரம்'3 என்றும், கூராழி வெண் சங்கு'4 என்றும், சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்: என்றும் கையும் திருவாழியுமான அழகு கைவிடாதே இவரைத் தொடருகின்றபடி, முகில் வண்ணன் அன்றோ? அந்த நிறத்திற்குப் பரபாகமான (பல நிறங்கள் கலத்தலால் உண்டாகும் அழகு) வெளுப்பையும், சுரியையும் உடைத் தான பூர் பரஞ்ச சன்யத்தையும், அங்ங்ணம் ஒரு விசே டணம் இட்டுச் சொல்ல வேண்டாத படியான அழகை யுடைத்தான திருவாழியையும் ஏந்தி. 13. திருவாய். 6.5; I 14. டிெ. 6.9:1 15. டிெ. 7.2:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/473&oldid=921294" இலிருந்து மீள்விக்கப்பட்டது