பக்கம்:வைணவ உரைவளம்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 45t

  • தாமரைக் கண்ணன் : தாமரைக் கண் என்றே தளரும்' என்றது பின் நாட்டுகிறபடி. திருமேனிக்குத் திவ்விய ஆயுதங்கள் பிரகாசமாய் இருக்கு மாறு போலே, ஆன்ம குணங்களுக்குத் திருக்கண்கள் பிரகாசமாய் இருக் கிறபடி. என்றது, அகவாயில் தண்ணளி எல்லாம் கண் வழியே அன்றோ தோற்றுவது என்றபடி. பகைவர் களுக்குத் திவ்விய ஆயுதங்களோடு ஒக்கத் திரு கண்களும் விரோதியாய்த் தோற்றுமாறுபோலே அன்றோ, அதுகூலர்க்குத் திருக்கண்களைப் போன்று திவ்விய ஆயுதங் களும் அழகுக்கு உடலாகத் தோற்றுகிறபடி, திருக்கண்க ளோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்க ளோடே திருக்கண்களையும் சேர்த்தும் ஆழ்வார்கள் அநுபவிப்பார்கள்."

இப்படிச் சேர்த்து அநுபவிப்பதற்குக் காரணம் ஏன்? என்ன: அதற்கு விடை-ஆயுதங்களோடே திருக்கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்த படிக்கு: , உனக்குத் தோற்றோம்" என்னப் பண்ணுமன்றோ? இவ்விடத்தே கிலாத்துக் குறிப் பகவர் வார்த்தையை அருளிச் செய்வர் சீயர்." கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய் இருக்குமாறு போலே ஆயிற்று, முகத்துக்குத் திருக்கண்கள் ஆபரணமாக இருக்கும்படியும். திருக் கண்டேன்; பொன்மேனி கண்டேன்; திகழும் அருக்கன் அணிகிறமும் கண்டேன்; செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன 16. திருவாய், 7.2:1 17. திவ்வியஆயுதங்களைத் திவ்விய ஆயுத ஆழ்வார்கள் என்றும்,திவ்விய ஆபரணங்களைத்திவ்விய ஆபரண ஆழ்வார்கள் என்றும் வழங்குதல் வைணவ மரபு. 18. யேர், நஞ்சியர். திருவாய், 3.7:2 காண்க. (இந் நூல் பாட்டு எண். 157).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/474&oldid=921295" இலிருந்து மீள்விக்கப்பட்டது