பக்கம்:வைணவ உரைவளம்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 453 எழுந்தருளா நிற்க, வழியிலே திருக்குருகைப் பிரான் பிள்ளாளைக் கண்டு : ஈசுவரனுக்குச் சொரூப வியாப்தி யேயோ, விக்கிரக வியாப்தியும் உண்டோ? என்று கேட்க, பாஷ்யக் காரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது, சொரூப வியாப்தியாய் இருக்கும்; ஆகிலும் எம்பார் ஒருநாள் உபாசகர் கட்கு அநுக்கிரகம் செய்தற் பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரகத் தோடே வியாபித்திருக்கும்" என்று அருளிச் செய்யக் கேட்டேன்' என்று பணித்தார். பிள்ளை விளையாட்டொலியுமறா; என்றது இத்திருப் பதிக்குச்24 சிறப்பானதொரு விசேடணம். சிறு பிள்ளைகள் திாண்டு விளையாடுவதென்பது எங்கும் உண்டு; இவ்வூரில் அப்பிள்ளைகள் விளையாடுவது கோயிலின் திருமுன்பிருக் கும் சந்நிதித் தெருவாகவே அமைந்துள்ளது. அச்சிறார்கள் ஆடும் விளையாட்டின் சுவையைக் கண்டு இத்திருப்பதி எம்பெருமான் ஆசைப்பட்டதாக ஒர் ஐதிகம் உண்டு. எதிரே யுள்ள பெரிய திருவடி சந்நிதி அவர்கள் விளையாடும் காட்சியை மறைப்பதாக இருப்பதைக் கண்டு வருந்தி 'கருடா அப்பால் போ!' என்று பெருமாள் வெறுத்துரைத் தாராம். இந்த ஐதிகம் இன்றும் நிலைபெற்றிருப்பதை உணர்த்துவான் வேண்டி கருடன் சந்நிதி சற்று ஒதுக்கமாக இருப்பதைக் காணலாம். 2○8 செங்கனி வாயின் திறத்த தாயும் செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்த தாயும் சங்கொடு சக்கரம் கண்டு கந்தும் தாமரைக் கண்களுக்(கு) அற்றுத் தீர்ந்தும் 23. தோற்ற அருளிச் செய்து-வியாக்கியானம் செய்து. 24. தென் திருப்பேரெயில்-பாண்டி நாட்டில் உள்ளது. திருப்பேர்' என்பது சோழ நாட்டில் உள்ளது (அப்பக் குடத்தான் சந்நிதி).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/476&oldid=921297" இலிருந்து மீள்விக்கப்பட்டது