பக்கம்:வைணவ உரைவளம்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 வைணவ உரைவளம் திங்களும் நாளும் விழாவ றாத தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த கங்கள் பிரானுக்கென் நெஞ்சம் தோழி! நானும் நிறையும் இழந்த துவே." (நீள்முடி-நீண்ட கிரீடம்; தாழ்ந்ததாயும்-ஈடு பட்டதாயும்; அற்றுத் தீர்ந்தும்-அநந்யார்க மாகியும்; திங்கள்-மாதம்; அறாத-இடை யறாத நிறை-காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம்} மகள் பாசுரம் : தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரெயில் சேரத் துணியும் நிலை யைக் கூறும் திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். இதில் பராங்குச நாயகி, தோழி! எனது நெஞ்சம், சிவந்த கோவைக் கனிபோன்ற திருவதரத்திலே ஈடுபட்டதாயும், சிவந்த பிரகாசம் பொருந்திய நீண்ட திருமுடியிலே தங்கின தாயும், சங்கையும் சக்கரத்தையும் பார்த்து மகிழ்ந்த தாயும், தாமரை போன்ற திருக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்த தாயும், திங்கள்தோறும் நாட்கள்தோறும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கின்ற நங்கள் பிரானுக்கு நாணத்தையும் நிறையையும் இழந்து விட்டது' என் கின்றாள். செங்கனிவாய்...தீர்ந்தும் இந்த முன்னடிகள் இரண்டி லும் செங்கனிவாய், திருமுடி, திருச்சங்கு, திருவாழி, திருக் கண் ஆகிய ஐந்திலே நெஞ்சு அகப்பட்டமை கூறப் பெறு கின்றது. செங்கனிவாய் முதலிய ஐந்தையும் ஒரு சேரச் சொல்வி இவற்றிலே என் நெஞ்சு ஈடுபட்டது என்னாமல் செங்கனிவாய் திறந்ததாயும், செஞ்சுடர் நீள்முடித் தாழ்ந்ததாயும் என்று பல வாக்கியங்களாகச் சொன்னது என்? என்னில்: 25. திருவாய். 7.3:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/477&oldid=921298" இலிருந்து மீள்விக்கப்பட்டது