பக்கம்:வைணவ உரைவளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 19 (ii) காஞ்சி வரதராசரைச் (அத்திகிரி அருளா வானைச்) சேவிக்க 24 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இவை 24 தத்துவங்களின் குறியீடுகள். அதாவது தந் மாத்திரைகள் 5; ஞானேந்திரியங்கள் 5; கருமேந்திரியங்கள் 5; பூதங்கள் 5; ஆக இவை 20. இவற்றுடன் பிரகிருதி l, மகான் 1, அகங்காரம் 1, மனம் 1 ஆக நான்கும் சேர 24 தத்துவங்களாகின்றன. இவற்றுடன் புருடன் (சிவான்மா): 1, மகாபுருடன் (பரமான்மா) சேர்ந்து வைணவ தத்துவம் 26 ஆகின்றது. (iii) திருக்கோட்டியூர் திருக்கோயிலின் விமானம் 'அட்டாங்க விமானம்' என்பது, 96 அடி உயரம் உள்ளது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை தஞ்சைக் கோபுரத் தின் நிழல்போல. ஒன்றன்மீது ஒன்றாக மூன்று தளங் களையுடையது. மேல் தளத்தில் திசைக்கொன்றாக எட்டு விமானங்கள் உள்ளன. எட்டு விமானங்கள் திருமந்திரத் தின் எட்டெழுத்துகள் போலவும், விமானத்தின் மூன்று தளங்கள் திருமந்திரத்தின் மூன்று பதங்கள் (ஒம்+நமோ + நாராயணாய) போலவும், மூன்றெழுத்துகளுடன் கூடிய (அ+உ +ம =ஒம்) பிரணவம் போலவும் அமைந்திருப்பதாக ஐதிகம். 16. ஹஸ்றி-யானை: கிரி-மலை. ஹஸ்திகிரி தமிழில் அத்திகிரி' என்றாயிற்று. ழி 17. புருடன்-புருஷன்: இது சரீரத்தில் வசிப்பவன் என்று பொருள்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/48&oldid=921301" இலிருந்து மீள்விக்கப்பட்டது