பக்கம்:வைணவ உரைவளம்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 457 பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை' என்று சொட் டையை (வாளை) உருவிப் பிடித்துக்கொண்டு சேவிப்பா ராம். நம் முதலிகள் அதனைக் கண்டு, இவரை மகா மதிகள்' என்று அழைப்பார்களாம், 2 Τ Ο கற்பார் இராமபிரானை : 29 (அவதாரிகை) ஆழ்வான் ஒருகால் இத் திருவாய்மொழிப் பத்துப் பாசுரங்களையும் இராமாவதார விஷயமாக்கி நிர்வகித்தாராம். அதற்குக் காரணம் : ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே, பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின். பேரெயில் சூழ்கடல் தென்னிலங்கை செற்ற பிரான்" என்றும், மாறு நிரைத்திருக்கும் சரங்கள்" என்றும் இராமாவதாரத்தினுடைய செயலை அதுசந்தித் து அவ் வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக் கின்றது. மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் இராமவதாரம் பிராசங்கிகமாகச் (இடைப் பிறவரலாகச்) சொல்லவேண்டி வந்தால் மனத்துக் Gaffum assor's" என்றே அன்றோ சொல்லுவது? : பட்டர் இராமவதாரத் தில் போர பட்சபா கித்து இருப்பர்' என்று, அவர் அருளிச் செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒரு நாள் :பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும் கழுத்திலே ஒலை கட்டித் தூதுபோன கிருஷ்ணன் நீர்மை 28. திருவாய். 7.5. 29. திரு. 7,3:7 30. டிெ, 31. திருப்பாவை.12 32. பெருமாள்' என்றது சக்கரவர்த்தித் திரு மகனை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/480&oldid=921302" இலிருந்து மீள்விக்கப்பட்டது