பக்கம்:வைணவ உரைவளம்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 459 வருகின்ற பழம் பகைவனான சிசுபாலன், கண்ணபிரா னுடைய திருவடிகளை அடைந்த தன்மையை அறிவாரான ஞானிகளை அறிந்து வைத்திருந்தும், தாங்கள் உய்வதற் குரிய வழியைக் கேட்கவேண்டும் என்று இருப்பவர்கள் கேசவனுடைய கீர்த்தியை அல்லாமல் வேறு சிலவற்றையும் கேட்பாரோ?' என்கின்றார் ஆழ்வார். கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்'; இதற்கு ஈடு : ...பகவானுடைய நிந்தைக்கு ஜீவனம் வைத்துக் கேட்கும் தண்ணியர்களும் கூடப் பொறுக்கமாட்டாமை செவி புதைத்து, இத்தனை அதிரச் சொன்னாய், இப்படிச் சொல்லப் பெறாய் காண்’ என்று சொல்லும்படியான வசவு களையே வைதல்." ஐதிகம் : சிசுபாலனைப் போன்று நாமும் வைது மோட்சம் பெறலாமோ எனின், அது மோட்சம் அன்று என்கைக்கு ஒர் ஐதிகம் காட்டுகின்றார். ஆள வந்தார் "சிசுபாலன் பெற்றிவன் காண்' என்று அருளிச் செய்வர்: அதுஎன்? என்னில்: இதற்கு அடியாகச்சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே; நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் (சுவாமி) வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தான் அத்தனை காண்' என்று அருளிச் செய் வர். சிசுபாலனிடத்தில் என்ன நன்மை கண்டு எம்பெரு மான் இங்ங்னம் அருள் செய்தான் என்னில்; வைகிறவ னுக்கும் பேர் சொல்லி வைய வேணுமே; ஆகவே நாமசங் கீர்த்தன சுக்ருதம் பெரிதுங் கண்டானாயிற்று எம்பெருமான். 212 கண்டும் தெளிந்தும்கற் றார்கண்ணற் காளன்று பாவரோ வண்டுண் மலர்த்தொங்கல் மார்க்கண் டேயனுக்கு வாழுகாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/482&oldid=921304" இலிருந்து மீள்விக்கப்பட்டது