பக்கம்:வைணவ உரைவளம்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 வைணவ உரைவளம் இண்டைச் சடைமுடி ஈச னுடன்கொண் டுசாச்செல்ல கொண்டங்குத் தன்னுடன் கொண்டுடன் சென்ற துணர்த்துமே?3' (கண்டும்-கண்ணாரக் கண்டும்; தெளிந்தும்நெஞ்சாரத் தெளிந்தும்; கண்ணற்கு.கண்ண னுக்கு அல்லாமல்; ஆள்-அடிமை; வண்டு உண்-வண்டுகள் மதுபானம் பண்ணும்; தொங்கல்-மாலை; வாழுநாள் - ஆயுளுக் காக; உடன் கொண்டு-தன்னோடு கூட அழைத்துக்கொண்டு; உசாச்செல்ல-பேசிக் கொண்டு செல்ல; கொண்டு - அவனை விஷயீகரித்த; உணர்ந்தும் - புராண முகத் தாலே அறிந்தும்) எம்பிராற்கு ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குவதாக அமைந்த திருவாய்மொழியில் ஒருபாகரம். இதில் ஆழ்வார். 'வண்டுகள் தேனை உண்ணுகின்ற மலர்களால் கட்டப் பெற்ற மாலைகளைத் தரித்த மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் அளித்தல் சம்பந்தமாக, பூமாலையைத் தரித்த சடைமுடியையுடைய சிவபெருமான் அவனைத் தன்னோடு அழைத்துக் கொண்டு, அறப்பெரிய வனான சர்வேசுவரன் பக்கல் உசாவவேண்டும் என்று செல்ல, அந்த நிலையிலேயே அவனைக் காக்கவேண்டும் என்று திருவுள்ளத்தே கொண்டு தன்னோடே ஒத்த தன்மையையும் கொடுத்துப் பின் ஒரு நாளும் பிரியாதே சென்றபடியை உணர்ந்தும் கண்டும் தெளிந்தும் கற்றவர் கள் கண்ணபிரானுக்கு ஆள் ஆவரேயன்றி மற்று ஒருவருக்கு ஆவரோ? ஆகார்' என்கின்றார். 34. திருவாய் 7.3:7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/483&oldid=921305" இலிருந்து மீள்விக்கப்பட்டது