பக்கம்:வைணவ உரைவளம்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 வைணவ உரைவளம் வயதாகவே நிறை ஆயுளை ஈந்தருளினன் என்பது புராணத்தில் கண்ட வரலாறு. இங்ங்னம் மார்க்கண்டேயனுக்கு அருள் செய்தது திருமாலின் அருளால் தான் பெற்ற சக்தியினாலே என்பதும், அச்சிவபிரானுக்கு அந்தராத்மாவாய் நின்று தொழில் செய்தவன் சீமந் நாராயணனே என்பதுமாகிய உண்மை பற்றி அவ்வரலாற்றைத் திருமாலின் மேலேற்றிக் கூறுவதும் உண்டு. திருமங்கையாழ்வார் பெரிய திரு மொழியில். மன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்த னைமதி யாதவெங் கூற்றங் தன்னை யஞ்சிகின் சரணெனச் சரணாய்த் தகவில் காலனை யுகமுனிங் தொழியா, பின்னை யென்றும்கின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேரருள், எனக்கும் அன்ன தாகுமென் றடியிணை அடைந்தேன் அணிபொழில் திரு வரங்கத்தம் மானே." என்ற பாசுரத்தில் சிவபிரானுடைய இடமே இல்லாமல் அருளிச் செய்துள்ளார். மார்க்கண்டேயன் இங்ங்ணம் நெடுநாள் வாழ்ந்து வருகையில் மகாப்பிரளயத்தைத் தான் காண்பதற்கு ஆசை கொண்டு எம்பெருமானைப் பற்றிப் பிரார்த்தித்து அங்ங்னம் காணும்போது, மகாப்பிரளயத்தில் சீமந் நாராயணன் ஒருவனையன்றி மற்றைத்தேவரையும் பிழைத் திருக்கக் காணாதவனாய் அப்பெருமானது திருவயிற்றி னுள்ளே அனைவரையும் கண்டு முடிவில் தான் நற்கதி பெறும் பொருட்டுத் திருமாலையே சரணம் அடைய, அப் 35. பெரி. திரு. 5.8:6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/485&oldid=921307" இலிருந்து மீள்விக்கப்பட்டது