பக்கம்:வைணவ உரைவளம்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 வைணவ உரைவளம் உண்டாக்க முயலக் கூடும். அப்போதும் தளராது இருப்ப வர்கள் வீ வின்றி நின்றவர். போர்செய்யேன் என்று நின்ற அருச்சுனன் கீதையைக்கேட்டுத் தலைக்கட்டிக் குழப்பம் தீர்ந்து *உன்னுடைய வார்த்தையின்படி செய் கின்றேன்' என்றானன்றோ? அப்படிப் பட்டவர்களைச் சொல்லுகின்றது. இவ்விடத்தில் ஈடு முப்பத்தாறாயிரப்படியில் ஒரு சம்வாதம் அற்புதமாக உள்ளது. அருச்சுனன்தான் எம் பெருமானைப் பெற்றானோ? இல்லையோ?" என்று நம் பிள்ளை சீயரைக் கேட்டாராம். அதற்கு நஞ்சீயர் அளித்த மறுமொழி; அர்ச்சுனன் பெற்றானா இல்லையா? என்ற விசாரம் உமக்கு எதற்காக? யார் யார் பெற்றார்கள்? என்று அவர்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்தோ நாம் பற்றவேணும்? எம்பெருமானுடைய அருளிச் செயல் என்று இவ்வளவேகொண்டு நாம் பற்றவேணுமேயொழிய, பெற்றவர்களைப் பார்த்தன்று காணும். குளிர்ந்த தண்ணிர் கண்டால் அது குடித்து விடாய் தீர்கின்றோம்; இது குடித்து யார் யார் தாகவிடாய் தீர்ந்தார்கள்? என்று விசாரித்துப் பார்த்தா பருகின்றோம்? இல்லையே' என்று அருளிச செய்தாராம். இவ்விடத்தில்; வேட் டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று உண்பவோ நீருண்பவர்' (கலி-62) என்ற அடிகளில்வரும் தலைவன் கூற்றோடு வைத்து இஃது எண்ணத்தகும்') 2 i 4 'பாகவரு மூவுலகம் : (அவதாரிகை) எம் பெருமானது குணம், அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தலைக் கூறும் திருவாய் 37. இதை, 18; 72 38. திருவாய் 7. 6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/487&oldid=921309" இலிருந்து மீள்விக்கப்பட்டது