பக்கம்:வைணவ உரைவளம்.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 465 மொழி இது. எம்பெருமானைப் பரிபூர்ணமாக அநுபவிக்க வேண்டும் என்கிற விருப்பம் தமக்குக் குறையற உண்டா யிருக்கச் செய்தேயும் அவ்வதுபவம் பெறாமையினாலே யான இழவு பொறுக்க வொண்ணாதிருந்ததனால், தம் முடைய ஆர்த்தி யெல்லாம் தோற்றப் பரமபத நாதனு டைய திருச்செவியளவும் படும்படியாகப் பெருமிடறு செய்து கூப்பிடுகின்றார் இத்திருவாய்மொழியில். அம்மங்கி அம்மாள் என்னும் ஆசிரியர் ::இத்திருவாய் மொழி பாடக் கேட்டு இதன் சப்த ராசிகளை வாயாற் சொல்லவும் காதாற் கேட்கவும் அதிகாரிகளே தவிர, இதில் ஆழ்வார்க்குச் செல்லுகின்ற ஆர்த்தி இப்படிப்பட்ட தென்று எடுத்துரைக்க நாம் அதிகாரிகளல்லோம்' என் பாராம். 215 ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கி லாதஓர் ஐவர் வன்க யவரை என்று யான்வெல் கிற்பனுன் திருவருள் இல்லையேல்! அன்று தேவர் அசுரர் வாங்க அலைகட லரவம் அளாவி, ஓர் குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே!49

ஒன்று-ஒருவிஷயம்; ஒருத்து-ஒருமைப்பாடு; நிற்கிலாத-ஆறியிருக்கமாட்டாத, கயவர்கீழ்மக்கள்; என்று- எப்பொழுது; வெல் கிற்பன்-வெல்ல வல்லவனாவேன்; அன்று

39. ஆர்த்தி-துக்கம். 40. திருவகப். 7, 6, 7. வை -30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/488&oldid=921310" இலிருந்து மீள்விக்கப்பட்டது