பக்கம்:வைணவ உரைவளம்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 வைணவ உரைவளம் பண்டொரு காலத்தில்; வாங்க-வலிக்கும் படியாக, அரவம் அளாவி-பாம்பைச் சுற்றி: ஒர் குன்றம்-மந்தர மலை; வைத்த-நாட்டின; கொடியேன்.-பாவியாகிய யான்; பருகுபருகும்படியான!

  • இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன் புறுவேன்' என்று ஆழ்வார் வருந்தும்படியாக அமைந்த திருவாய்மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், "அக்காலத்தில் தேவர்களும் பின்வாங்கி, அலைகளை யுடைய கடலிலே வாசுகி என்னும் பாம்பினைச் சுற்றி ஒப்பற்ற மந்தரம் மலையை வைத்த எந்தையே! கொடியே னாகிய அடியேன் பருகுவதற்குரிய அமுதாய் இருப்பவனே! ஒரு விஷயத்தைச் சொல்லி அந்த ஒருமைப் பாட்டிலேயே நில்லாத ஒப்பற்ற ஐம்பொறிகளாகிய வலிய கயவர்களை, உன்திருவருள் இல்லையேல் என்றைக்குயான் வெல்வேன்?" என்கின்றார் ஆழ்வார்.

அன்று தேவர் ...குன்றம் வைத்த எந்தாய்: இதில் அடங்கி யுள்ள இதிகாசம் : முன்னொரு காலத்தில் இவ்வண்ட கோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணு லோகத்திற்குச் சென்று திருமகளைப் புகழ்ந்து பாடி அவளால் ஒரு பூமாலை அளிக்கப்பெற்றாள் வித்தியா தர மகள் ஒருத்தி. அவள் மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன் வீணையில் தரித்துக் கொண்டு பிரம லோகம் வழியாகத் திரும்பி வருகையில் துர்வாசமாமுனி அவளை வணங்கித் துதிக்க, அவ்விஞ்சை மங்கை அம் மாலையை அம் முனிவருக்கு அளித்திட்டாள். முனிவர் அம்மாலையின் பெருமையை உணர்ந்து அதனைத் தலைமேல் கொண்டு களிப்புடன் உம்பர் உலகிற்கு வந்தார். அப்பொழுது அங்கு வெகு உல்லாசமாக ஐராவதத்தின் மீது பவனி வந்து கொண்டிருந்த இந்திரனைக் கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைநீட்டிக் கொடுத்தார். இந்திரன் அதை மாவட்டியினால் வாங்கி அந்த யானையின் பிடரியின்மேல் வைத்தான். அம் மதயானை அவனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/489&oldid=921311" இலிருந்து மீள்விக்கப்பட்டது