பக்கம்:வைணவ உரைவளம்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 467 துதிக்கையாற் பிடித்திழுத்துக்கீழெறிந்து காலால் மிதித்துத் துவைத்தது. அதுகண்டு முனிவர் கடுஞ்சினங்கொண்டு இந்திரனை நோக்கி இவ்வாறு செல்வச் செருக்குற்ற உன்னுடைய ஐசுவரியங்களையெல்லாம் ஒளிந்து விடக் கடவன' என்று சபிக்க, உடனே தேவர்களின் செல்வ மெல்லாம் ஒழிந்தன; ஒழியவே அசுரர் வந்து பொருது அமரரை வென்றனர். பிறகு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணம் அடைந்தான். அப்பிரான் அபய மளித்தான். அவன் கட்டளைப்படி அசுரர்களைத் துணை யாகக் கொண்டு மந்தரமலையை மத்தாகவும் வாசுகியைக் கடை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடையலாயினர். அப்பொழுது மந்தர கிரி கடலில் அழுந்தியது. தேவர்களின் வேண்டுகோளின்படி திருமால் பெரியதோர் ஆமைவடிவங் கொண்டு அம்மலையின்கீழ்ச் சென்று அதனைத் தன் முதுகினால் தாங்கி அம்மலை மீண்டும் அழுந்தி விடாமல் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந் தருளியிருந்தனன். இந்நிலையில் வாசுகியின் வாலைப் பிடித்துக் கொண்டு தேவர்களும், தலையைப் பிடித்துக் கொண்டு அசுரர்களும் கடையத் தொடங்கினர். இருவரும் கடைய வலிமையற்றவராய் நின்றனர். அது நோக்கித் திருமால் தான் ஒரு வலிய திருமேனியைத் தரித்து இரு சாரார் பக்கத்திலேயும் நின்று வாசுகியின் வாலையும் தலையையும் பிடித்து வலமும் இடமுமாக இழுத்துக் கடைந்தருளின் அப்பால் திருமால் தன்வந்தரி என்னும் தேவ உருவத்தை மேற்கொண்டு அமுதம் நிறைந்த கமண்டலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அந்தப் பாற் கடலிலிருந்து தோன்றினன். அப்பொழுது அசுரர்கள் தந் வந்திரியின் கையிலிருந்த அமுதகலசத்தை வல்லந்தமாகப் பிடுங்கிக் கொண்டனர். எம்பெருமான் காண்பாரை ஈர்க்கும் அழகிய ஒரு பெண் வடிவத்தைத் தரித்து அசுரர்களை மயக்கி வஞ்சித்து அமுதத்தைக் கைக்கொண்டு அமரர் களின் குழுவிற்கு மாத்திரம் படைத்தனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/490&oldid=921313" இலிருந்து மீள்விக்கப்பட்டது