பக்கம்:வைணவ உரைவளம்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 469 21ア என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய அன்றைக்கு அன்று என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை இன்தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் கின்றளன் சோதியை என்சொல்லி கிற்பானோ? 42 fஎன்னை.விஷயிகாரப் பெறா திருந்த அடியேனை; என்றைக்கும்-முதலிலேயே சாசுவதமாக அங்கீகரித்து: போகிய அன்றைக்கு அன்றுநிகழ்கின்ற நாள்தோறும்; தன்னாக்கி-தன் னோடொத்த ஞான சக்திகளுடையனாம் படியாக்கி; இன்தமிழ் - இனிய தமிழ்ப் பிரபந்தம்; பாடிய-பாடுவித்துக் கொண்ட: ஆதியாய் நின்ற-மூலகாரணமாய் இருந்து: நிற்பன்-தரிப்பேன்| இன் கவிபாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளிய மைக்குக் கைம்மாறு இல்லை எனக் கூறும் திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், காலம் என்னும் ஒருபொருள் உள்ள வரையிலும் உய்விக்கத் தகுதியாம்படி அங்கீகரித்துக் கழிகின்ற நாள்கள்தோறும் என்னைத் தனக்கு அடிமையாக்கி, என்னால்தன் இனிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடுவித்துக்கொண்ட ஈசனை, காரணமாய் நின்ற என்சோதியை என்ன என்று சொல்லித் தரிப்பேன்?" என்கின்றார். "என்னைத் தன்னாக்கி......ஈசனை : அறிவின்மை, ஆற்றலின்மை இவைகட்கு இலக்காய் இருக்கிற என்னை, 42. திருவாய். 7, 9t l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/492&oldid=921315" இலிருந்து மீள்விக்கப்பட்டது