பக்கம்:வைணவ உரைவளம்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 471 தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன் என் முன்சொல் லும்மூ வுருவாம் முதல்வனே.43 (என்சொல்லி--எதைச்சொல்லி; என் இன் உயிர்என்னுடைய ஆன்மா; ஒன்று ஆயர்-தனக் கொருபொருளாக, இன் கவி. இனிய பிரபந்தம்: தன் சொல்லால்-தன் உக்திகளால்; தான் தன்னை-தானே தன்னை: கீர்த்தித்தபுகழ்ந்து; என்முன் சொல்லும்-என் உள்ளே யிருந்து முதலில் சொல்லுகின்ற; மாயன்ஆச்சரிய பூதன்; முவுருமாம் முதல்வன். திரிமூர்த்தியாயிருக்கும் காரண பூதன்! இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளி யமைக்குக் கைம்மாறு இல்லையென்று கூறும் திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், என்னுடைய இனிய உயிரானது இன்று ஒரு பொருளாகும்படி, என் சொல்லால் ,யான் சொன்ன இனிய கவி என்பதாகப் பலர் அறியும்படி செய்து தன் சொல்லால் தானே தன்னைப் புகழ்ந்து பாடிய ஆச்சரியத்தையுடையவனும், எனக்கு முன்னே சொல்லுகின்ற, மும்மூர்த்திகளின் உருவமாய் இருக்கின்ற முதல்வனுமான எம்பெருமானை எந்தக் காரணத்தைக் கொண்டு தரித்திருப்பேன்?' என்கின்றார். என்சொல்லால்...... இன்கவி என்பித்து சொல்லும் என்னதாய் சொன்னேனும் நானாய், அதுதான் இனிய கவி யாம்படி நாட்டிலே பிரசித்தமாக்கினான். தன்சொல்லால்......கீர்த்தித்த சொல்லும் தன்னது, சொன்னவனும்தான், சொல்லிற்றும் தன்னை, 43. திருவாய். 7,918

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/494&oldid=921317" இலிருந்து மீள்விக்கப்பட்டது