பக்கம்:வைணவ உரைவளம்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ሣ4 வைணவ உரைவளம் படிக் கட்டிலே ஆளவந்தார் எழுந்தருளியிருக்க, உடையவர் திருப்புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கின்றவரைக் கண்டு ஆம் முதல்வன் இவன்' என்று ஈருளிச் செய்தா ராம்' என்பது. அதாவது, காஞ்சி அஸ்திகிரியின் திரு மடைப்பள்ளி வலம்வரு வீதியிலே ஆளவந்தார் யாதவப் பிரகாசனோடே இருந்த எம்பெருமானாரைத் திருக்கச்சி நம்பிகள் மூலமாகத் தெரிந்துகொண்டு ஆம் முதல்வன்' என்று குளிரக் கடா ட்சித்தருளின ஐதிகத்தை அருளிச் செய்தபடி. இதனால் இரண்டாவது நிர்வாகம் ஆளவந்தார் திருவுள்ளத்திற்கு மிகவும் இணங்கியதென்று காட்டினபடியாகும். 露2O வாய்க்குங்கொல் கிச்சலும் எப்பொழு தும்மனத்துசங்கு கினைக்கல்பெற, வாய்க்கும் கரும்பும் பெருஞ்செங் + கெலும்வயல் சூழ்திரு வாறன்விளை வாய்க்கும் பெரும்புகழ் மூவுல கீசன் வடமது ரைப்பிறந்த வாய்க்கும் மணிநிறக் கண்ணபி ரான்றன்மலரடில் போதுகளே.' (வாய்க்குங்கொல்-வாய்க்குமோ, நிச்சல-நாள் தோறும்; எப்பொழுதும் - எல்லா நேரத்தி லும்; வாய்த்த-சகுதியான, வாய்க்கும்வாய்த்த வாய்க்கும்- அநுபவிக்க வாய்த்த: மலர் அடிப்போதுகள் - திருவடித் தாம ரைகள்) இது திருவாய்மொழியில் திருவாறன்விளை எம் பெருமானைக் கண்டு அடிமை செய்ய எண்ணும் பாரிப்பைக் 46. திருவாய், 7.10:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/497&oldid=921320" இலிருந்து மீள்விக்கப்பட்டது