பக்கம்:வைணவ உரைவளம்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 வைணவ உரைவளம் பெருமாளும் அவரைத் தேடியருளிக் காணாமல் நம் இளை யாற்றுக் குடியான் வந்திலன்; நங்கண்ணாலம் அல்லவோ?’ என்று திருவுள்ள கானாராம். அவர்தாம் ஆறாந் திருநாளிலே சேவித்திருக்கச் செய்தே நாம் உனக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்று கேட்டருள, தேவரீர் தந்தருளின சரீரத்தைக் கொண்டு போரக் காரியம் கொண் டேன்; இனிப் போக்குவரத்துக்குத் தகுதியில்லாதபடி போர இளைத்தது என்ன, வாராய், மெய்யே இளைத்தே யாகில் இங்ங்னே இரு' என்று அருளிச் செய்தார்: பெருமாள் நடுவில் திருவாசலுக்கு அவ்வருகே எழுந்தருளுங் காட்டில் அவர் திருநாட்டிற்கு எழுந்தருளினார்' என்பதாக. 221 மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழு தும்இருத் திவணங்கப் பலரடி யார்முன்பு அருளிய பாம்பனை யப்பன் அமர்ந்துறையும் மலரின் மணிநெடு மாடங்கள் கீடு மதிள் திரு வாறன்விளை உலகம் மலிபுகழ் பாடநம்மேல் வினைஒன்றும் நில்லா கெடுமே. 4" (இருத்தி-இருக்கப்படி பண்ணி; வணங்கதன்னையே வணங்கு மாறு; அடியார்-பக்தர் கள்; அமர்ந்து-உகந்து; நெடு-ஓங்கின; நீடு -நெடிய; பாட-பாடின அளவிலே! இதுவும் நம்மாழ்வாரின் திருவாறன் விளை எம்பெரு மான்மீது மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருவாய் மொழிப் பாசுரம். இதில் ஆழ்வார், மலர்ந்த திருவடித் 47. திருவாய், 7.40:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/499&oldid=921322" இலிருந்து மீள்விக்கப்பட்டது