பக்கம்:வைணவ உரைவளம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்ரீ ராம ஜெயம்

சிறப்புப் பாயிரம்
திரு. S. K. இராமராசன் (‘கம்பராமன்’) பதிப்பாசிரியர், பேரகராதித்துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை.

நற்றவ வடிவாம் வைதிக மதத்தை
    நவையறு கோவிலைக் குளத்தைப்
பெற்றியிற் காக்க எண்ணிய விஜயப்
    பேரர சுளத்தினில் ஆய்ந்து
கொற்றமார் குன்றில் மேவுரெட் டிகளைக்
    குலவிய தமிழகத் தனுப்பி
வெற்றிபெற்றது;கற் கொண்டரெட் டிகளும்
    வீரத்தால் சமயத்தைப் புரந்தார். 1


குன்றினி லிருந்து மேவுகா ரணத்தால்
    குலவுகொண் டாரெட்டி என்று
மன்றெலாம் புகழப் பொலிந்தவர் நிலத்தைப்
    மகிழ்வுடன் உழுதொழில் புரிந்து
நன்றமை பண்ட குலத்தவர் என்று
    கானிலம் புகல் பெயர் பெற்றுத்
தென்றமிழ் காட்டை யுயர்த்தினார்; இவரால்
    செந்தமிழ் வீறுபெற் றதுவால். 2


1. கொண்ட-மலை (தெலுங்கு)

2. பண்ட-வேளாண்மை (தெலுங்கு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/5&oldid=1527481" இலிருந்து மீள்விக்கப்பட்டது