பக்கம்:வைணவ உரைவளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியாழ்வார் திருமொழி துப்புடை யாயர்கள்தம் சொல்வழு வாதொருகால் தூய கருங்குழல்கம் தோகை மயிலனைய நப்பின்னை தன்திறமா கல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனு மானவனே தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய,என். அப்ப!எ னக்கொருகா லாடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே." (துப்புஉடை-நெஞ்சில் கடினத் தன்மை உடையவ ரான்; ஆயர்கள்-இடையர்கள்; வழுவாதுதப்பாமல்; ஒருகால்-ஒரு காலத்திலே; துாயஅழகியதான; கருங்குழல்-கரிய கூந்தலை: நல்விடை-(கொடுமையில்) நன்றான காளை கள்; அவிய-முடியும்படியாக; திறல்மிடுக்கு; கடவி-நடத்தி; அப்ப-அப்பனே) இது கண்ணனின் செங்கீரைப் பருவத்தை வருணிக்கும் பெரியாழ்வாரின் பாசுரம். இதில் ஆழ்வார், நெஞ்சில் கடினத் தன்மை உடையவரான இடையர்களுடைய வார்த் தையைத் தப்பாமல் ஒரு காலத்தில் கரிய கூந்தலையும் மயில் போன்ற சாயவையும் உடைய நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு காளைகளும் முடியும் படியாகத் தன் 1. பெரியாழ். திரு. 1.6;?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/50&oldid=921324" இலிருந்து மீள்விக்கப்பட்டது