பக்கம்:வைணவ உரைவளம்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ገ8 வைணவ உரைவளம் பின்னே அனுப்ப வேண்டும்; என் பின்னே வாரா நின்றால் *ஒருவன் பின்னே போகின்றோம்' என்று, தன் நெஞ்சில் படாத நிழல்போல் என்னைப் பின் தொடர்பவனாக இருக்க வேண்டும்; அப்படிப்பட்ட ஒரு சீடனைத் தேர்ந் தெடுத்து அனுப்புக' என்று பெரிய நம்பி திருவாய் மலர்ந் தருள, இப்படிப்பட்ட ஆண்ம குறை பரிபூரணரான சீடர் ஆழ்வான் ஒருவனே என்பது உடையவருக்கு நன்கு தெரிந் திருந்தும், இதனைப் பெரிய நம்பியின் திருவாக்கினால் வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு நம்பியை நோக்கி, இப்படிப்பட்ட சீடன் ஒருவன் இவ்விடத் தில் இருப்பதாகத் தெரியவில்லையே' என்று சொல்லி நிற்க, நம் கூரத்தாழ்வானை அனுப்பலாகாதோ?’ என்று நம்பி நியமித்தருள, அருகிலிருந்த ஆழ்வான் இதைச் கேட்டு நம்பிகள் நம் உண்மையான இயல்பை இங்ங்னே யறிந்து பல சீடர்களின் முன்னே இப்படி அருளிச் செய்யும் படியான பேறு பெற்றோமே என்று பெருமகிழ்ச்சி யடைந்து, நம்பிகளின் திருவுள்ளப்படியே பிரதட்சிணத்திற் குப் பின் சென்றார். இஃது இவ்விடத்திற்குப் பொருத்த மான இதிகாசம். 2宏2 ஒன்றுகில் லாகெடும் முற்றவும் தீவினை; யுள்ளித் தொழுமின் தொண்டிர் அன்றங் கமர்வென் றுருப்பிணிகங்கை யணிநெடுங் தோள்பு ணர்ந்தான் என்றுமெப் போதுமென் னெஞ்சம் துதிப்பவுள் ளேயிருக் கின்றபிரான் கின்ற அணிதிரு வாறன்வி ளையெனும் ள்ேநகரம் அதுவே." 48. திருவாய். 7.10;6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/501&oldid=921326" இலிருந்து மீள்விக்கப்பட்டது