பக்கம்:வைணவ உரைவளம்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 479 (ஒன்றும் நில்லா-ஒன்றும் மீதமில்லாதபடி: முற்றவும்-முழுதும்; தீவினை-கொடிய பாவங்கள்; உள்ளி-சிந்தித்து; அன்று-முன்பு ஒரு காலத்தில் அமர்-போர்: உருப்பிணிஉருக்குமிணி, என்றும் எப்போதும்-ஒய் வின்றி; நின்ற-கோயில் கொண்டுள்ள அணி - அழகிய; திருவாறன் விளை சென்று, எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமை செய்வதாகக் கருதுவதைக் கூறும் திருவாய்மொழி பில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், ::உருக்குமினிப் பிராட்டி காரணமாகச் சிசுபாலன் போருக்கு வந்த அக்காலத்தில் போரிலே அவனை வென்று உருக்குமிணிப் பிராட்டியினது அழகிய நீண்ட தோள் களைச் சேர்ந்தவனும், எல்லாக் காலத்திலும் எல்லா நேரத்திலும் என் நெஞ்சமானது துதிக்க என் மாத்திற் குள்ளே எழுந்தருளியிருக்கின்ற உபகாரகனுமான எம் பெருமான் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கின்ற அழகிய திருவாறன் விளை என்னும் பெரிய நகரத்தை, தொண்டீர்! நினைந்து வணங்குங்கள்; தீவினைகள் ஒன்றும் நில்லாவாய் முழுதும் அழிந்து விடும்' என்கின்றார். அமர்வென்று உருப்பிணி கங்கை நெருந்தோள் புணர்ந்த வரலாறு : விதர்ப்ப நாட்டில் குண்டினபுரம் நகரை ஆண்டு வந்தவன் பீஷ் மகன் என்னும் அரசன். இவனுக்கு உருக்குமன் முதலிய ஐந்து பிள்ளைகளும் உருக்குமிணி என்ற ஒரு பெண் ணும் இருந்தனர். உருக்குமிணி திருமகளின் அவதாரம். இவளுக்குத் தக்க வயது வந்தவுடன் கண்ணபிரான் அங்குச் சென்று அப் பெண்ணைத் தனக்குத் தாரை வார்த்து மணம் முடிக்குமாறு கேட்க, உருக்குமன் என்பவன் அவளைச் சிசுபாலனுக்குக் கொடுக்க நினைத்துக் கண்ணனுக்குக் கொடுக்க மறுத்து விட்டான். சின்னாட்கள் கழித்து உருக்கு மிணியின் திருமணத்திற்காகச் சுயம்வரம் கோடித்து எல்லா நாட்டரசர்கட்கும் ஒலை போக்கினான். இதற்கிடையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/502&oldid=921327" இலிருந்து மீள்விக்கப்பட்டது