பக்கம்:வைணவ உரைவளம்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 வைணவ உரைவளம் உருக்குமிணி அன்றிப்பின், மற்றொருவர்க்கென்னைப் பேசலொட்டேன் மாலிருஞ் சோலை யெம்மாயற் கல்லால்" (பெரியாழ். திரு. 3.4:5) என்ற துணிவையுடையவளாகை யால் தன்னை எவ்வகையாலாகிலும் மணந்து செல்லுமாறு கண்ணனிடம் ஒரந்தணனைத் தூது போக்கியிருந்தாள். கண்ணபிரானும் அங்ங்ணமே பலராமன் முதலியோரைத் துணை கொண்டு அப்பட்டணத்திற்கு எழுந்தருளி'திருமண ஒலைக்கு முதல் நாள் உருக்குமினியை எல்லோருமறியத் தேரிலேற்றிக்கொண்டு ឧទrr நோக்கிப் புறப்பட சிசுபாலன் முதலிய அாசர்கள் கண்ணனை எதிர்த்துப் போர் செய்ய முயன்றனர். பலராமனும் தானும் அவர்களை வலி யடக்கி வென்று ஒட்டிவிட்டனர். பின்னர் உருக்குமினியின் தமையனான உருக்குமன் கண்ணனை முடிப்பதாக ஓங்கி வர, அவனைக் கண்ணபிரான் உருக்குமினியின் வேண்டு கோளின்படி உயிர்க்கொலை செய்யாமல் அவனது மீசையையும் குடுமியையும் சிரைத்து பங்கப் படுத்தினன். இங்ங்ணம் பகைவர்களைத் தொலைத்துப் பிறகு உருக்கு மிணியைத் திருமணம் புணர்ந்து கொண்டதாக வரலாறு. எட்டாம் பத்து 223 அடியேன் உள்ளான் உடல்உள்ளான் அண்டத்து அகத்தான் புறத்துஉள்ளான் படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம்பரன் கடிசேர் நாற்றத்துள் ஆலை இன்பத் துன்பங்கழி நேர்மை ஒடியா இன்பப் பெருமையோன் உணர்வில் உம்பர் ஒருவனே." 1. திருவாய். 8.8:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/503&oldid=921328" இலிருந்து மீள்விக்கப்பட்டது