பக்கம்:வைணவ உரைவளம்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 481 [அடியேன்-ஆன்மாவில்: உடல் உள்ளான்சரீரத்தில் உள்ளான்; அண்டத்து அகத்தாள் -அண்டத்துக்குட்பட்ட சகல பொருள்களி லும் அந்தராத்மாவாய்; புறத்து-அண்டத் துக்கும் புறம்பு பட்ட எல்லாப் பொருள் கட்கும்; படி - ஒப்பு: ப டி ய ன் - பிரகாரத்தையுடையன்; பரம்பரன்-மேலான வனுக்கு மேலானவன்; கடி-நாற்றம், மணம்; ஆலை--தேன்1 ஒடியா_அழியாத, உம்பர்-மேற்பட்டிருக்கும்1 ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுவதாக அமைந்த திருவாய்மொழியில் உள்ள பாசுரம் இது. இதில் அவர், அண்டத்திற்கு உள்ளே இருக்கும் எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாக இருப்பவனும், அண்டத்திற்குப் புறத்திலே இருக்கும் எல்லாப் பொருள்கட்கும் அந்தர்மியாக இருப்பவனும், இது தான் எல்லா வகையிலும் ஒத்த பொருள் என்று எடுத்துக் கூறத் தக்க உவமையை உடையன் அல்லாதவனும், மேலானவர்களுக்கும் மேலானவனும், புதுமை சேர்ந்த மணத்திலும் தேனிலும் உள்ள இன்பத்தினுடைய குற்றம் நீங்கின சாரமான பாகம்போல் இருக்கிற அழியாத ஆனற். தத்தின் பெருமையுடையவனும் ஞானத்தில் மேம்பட்டிருக் கின்ற ஒருவனுமான எம்பெருமான் என் ஆன்மாவிலும் உள்ளான்; என் உடலிலும் உள்ளான்' என்கின்றார். அடியேன் உள்ளான் உடல் உள்ளான் : இதிலுள்ள ஐதிகம் : எம்பெருமானார் கோஷ்டியிலே உபய வேதாந்த கிரந்தங்கள் காலட்சேபம் நடந்துகொண்டிருக்கும்பொழுது *ஆன்மாவுக்கு ஞான ஆனந்தங்களும் அடிமையும் நிருபக மாகச் சொல்லப்படுகின்றனவே. இவற்றுள் அந்தரங்க நிரூபகம் எது?" என்று திருவோலக்கத்திலே ஒர் ஆராய்ச்சி நடந்ததாம். எம்பெருமானார் தாம் முற்றறிவினராய் எழுந்தருளியிருக்கச் செய்தேயும் இதனை ஆசாரியர் மூல வை.-31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/504&oldid=921329" இலிருந்து மீள்விக்கப்பட்டது