பக்கம்:வைணவ உரைவளம்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 வைணவ உரைவrம் மாக வெளியிட வேண்டும் என்று திருவுள்ளம் பற்றிக் கூரத்தாழ்வானை நோக்கி, வாரீர், ஆழ்வான்! திருக் கோட்டியூர்க்குச் சென்று நம்பியைச் சேவித்து இதனை அறிந்து வாரும் என்று நியமிக்க, ஆழ்வானும் நம்பி சந்நிதிக்கு எழுந்தருளி தண்டன் சமர்ப்பித்துச செய்தியை விண்ணப்பம் செய்து ஆறு மாதங்கள் சேவித்திருந்தும் அவர் திருவுள்ளம் இரங்கக் காணாமையாலே, புறப்படப் புக, நம்பி அவரை அழைத்து, மேயர் வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார் ‘அடியேன் உள்ளான் உடல் உள்ளான்' என்று அருளிச் செய்தபடி கண்டயே' என்று மொழிந் தருள, ஆழ்வானும் கிருதார்த்தன் ஆனேன்" (பேறு பெற்றவன் ஆனேன்) என்று எழுந்தருளி இதனை எம் பெருமானார் திருவடிகளிலே விண்ணப்பம் செய்ய மகாநிதி யான (சேமவைப்பான) இந்த பூரீ சூக்தியின் பொருளைத் திருவோலக்கத்தில் விவரித்தருளினார். விவரணம் : : அடியேன்" என்ற சொல் மற்றும் பல இடங்களில் வந்தாலும் அவ்விடங்களிலெல்லாம் தேக விசிஷ்டனான ஆன்மாவே அடியேனென்ற சொல்லுக்குப் பொருளாகும். ‘அடியேன் செய்யும் விண்ணப்பமே” (திருவிருத். 1) என்கின்ற இடத்தை எடுத்துக் கொள்வோம். தேகமின்றி வெறும் ஆன்மா விண்ணப்பம் செய்யமுடியா தன்றோ? தேக விசிஷ்டனான ஆன்மாவே விண்ணப்பம் செய்ய முடியுமாதலால் இங்கு வெறும் ஆன்மாவை அர்த்த மாகக் கொள்வதற்கில்லை. எந்த இடத்திலும் இப்படியே. அடியேன் சிறிய ஞானத்தன்' என்று ஞானமுடைமை சொல்லியிருப்பதனால அது தேகத்திற்கு அசம்பாவிதமாய் ஆன்மாவிற்கே சம்பாவிதமாகையாலே அங்கு அடியேன்” என்பது வெறும் ஆன்மாவைத்தானே சொல்வியாக வேண்டுமென்று சிலர் பிரமிக்கக் கூடும்; அங்கும் தேக விசிஷ்டனான ஆன்மாவையே சொல்லுகின்றது. ஏனெ னில், காண்பான் அலற்றுவன்' என்னும் செயலிலே அச் சொல் அந்வயிக்க வேண்டுமாதலால் வெறும் ஆன்மா அலற்ற முடியாதாகையாலே. ஆகவே அடியேன்" என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/505&oldid=921330" இலிருந்து மீள்விக்கப்பட்டது