பக்கம்:வைணவ உரைவளம்.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 48ገ சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் நல்ல பதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே.5 கோட்பாடு-கட்டளைப்பாடு; நிறைந்த-வியா பித்த, கமலம்-தாமரை: கொண்டபெண்டிர் மக்கள்-குடும்பமாக; நல்ல பதம்-நல்ல மேன்மை: மனைவாழ்வர்-இல்லறத்தார்க ளாக வாழப் பெறுவர்.1 இது திருவாய்மொழிப் பாசுரம்: பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ்வார் பேசுவ தாக அமைந்த திருவாய்மொழியின் பலசுருதிப் பாசுரம். :இத்திருவாய்மொழியை ஒதவல்லவர்கள் தாம் கொண்ட பெண்டிரோடும் புதல்வர்களோடும் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருத்தலாகிய நல்ல தன்மையோடு இல்லறத் தில் வாழ்வார்கள்' என்கின்றார்.

  • சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரம்': வேதம்போலே தான் தோன்றி அன்றிக்கே இருக்கையன்றிக்கே திருவாய் மொழி ஆழ்வார் பக்கலிலே அவதரித்து உயர் குடிப்பிறப்பு பெற்றதாயிற்று.

இவ்விடத்தில் ஈட்டில் காணும் ஓர் இதிகாசம் எம்பெரு மானார் திருவனந்தபுரயாத்திரை பெருந்திரளாக எழுந்த ருளச் செய்தே திருக்கோட்டியூரில் செல்வ நம்பி திருமாளி கையிலே சென்று சேர, அப்போது நம்பி வேற்றுார்க்குச் சென்றிருந்தாராம்; இல்லத்தில் நூறு வித்துக்கோட்டை நெல் கிடந்ததாம். வருந்தியழைத்தாலும் வரமாட்டாத மகாபாக வதோத்தமர்கள் தாமாக வந்தருளினார்களே யென்று கு தூகலம் கொண்ட செல்வநம்பியின் தேவி ബ്--ബ്-- 5. திருவாய். 8.10:11,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/510&oldid=921336" இலிருந்து மீள்விக்கப்பட்டது