பக்கம்:வைணவ உரைவளம்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 வைணவ உரைவளம் tகை உண்டாய்-கையிலே பொருள் உண்டாய்; செல்லக் காணில்-நடையாடக் கண்டால்; போற்றி என்று-மங்களாசாசனம் செய்து: ஏற்று-ஏதேனும் ஒன்று பெற்றுக்கொண்டு: எழுவர்-அகன்று போவார்கள்: இருன்அஞ்ஞானம்; ' இன்மை-வறுமை; என்னேஐயோ; மங்க-தொலைய: அருள்- கிருபை: அரண்-புகல் : எல்வா வகையிலும் உறவினான திருமாலைச் சேர்மின் என்று கூறும் திருவாய்மொழியில் இஃது ஒருபாசுரம். இதில் ஆழ்வார், கையிலே பொருள் இருப்பரைக் கண்டால் *வணக்கம்" என்று கூறி யாதாயினும் ஒன்றனைப் பெற்றுக் கொண்டு அகன்று போவர்; அறிவின்மையையும் துன்பத் தையும் உண்டாக்குகின்ற வறுமையைக் கண்டால் அந்தோ!" என்று இரங்குவாரும் இல்லை; ஆதலால் கண்டவர் அனைவரும் கலங்கும் படியான தொழில்களைச் செய்கின்ற அசுரர்கள் அழியும்படியாக வட மதுரையிலே அவதரித்த கண்ணபிரானுக்கு, அருளைப் பெறுதற்குரிய அடியவர்களாகி உய்வதே நலம்; அங்ங்ணம் இன்றேல், பாது காவல் வேறு இல்லை' என்கின்றார். இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை :கையி லுள்ளதெல்லாம் போய் வறுமை எய்தினவாறே ஐயோ! பாவம்' என்கின்ற ஒப்புக்கான சொல்கூட வாயில் வர மாட்டாது. இவ்விடத்தில் பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பது; இரப்பாளர்களுக்கு இட்டே வறியவனான ஒருதனிகன்; அவனுடைய எல்லாச் சொத்தையும் கொண்டு செல்வம் பெற்றவர்களுண்டே அவர்கள் இந்த வறுமை எய்தினவனை ஏனப்பா! நலமா?’ என்று வினவினால் அப்படி வினவின மாத்திரத்தில் அவன் ஒரு மதிப்படைந்து ஜீவிக்கும் படியாயிருக்குமென்று வைத்துக்கொள்வோம்; அதையும் பொறாதே அப்படிப்பட்ட நலம் விசாரித்தலை யும் செய்யார்கள் என்று"; என்னே என்பாரும் இல்லை' என்பதற்கு இது சுவை மிக்க பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/513&oldid=921339" இலிருந்து மீள்விக்கப்பட்டது