பக்கம்:வைணவ உரைவளம்.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 493 தொண்டரோர்க் கருளிச் சோதிவாய் திறந்துன் தாமரைக் கண்களால் நோக்காய் தெண்டிரைப் பொருநல் தன்பனை சூழ்ந்த திருப்புளிங் குடிக்கிடக் தானே." (பண்டைநாள்-நெடுநாள்; பங்கயத்தாள்பெரிய பிராட்டியார்; கோயில் சீய்த்துதிருவலகிடுதல், மெழுகுதல், கோலமிடுதல் போன்றவை செய்து; பல படிகால்-அநாதி காலமாக, குடிகுடி வழி வந்து-வமிச பரம் பரையாக ஆட்செய்து-அடிமை செய்து: தென் திரை-தெளிந்த அலை; பொருநல்பொருநை நதி, பணை-பண்ணை) எல்லா உறவின் காரியமும் நமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுவதாக அமைந்த திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், தெளிந்த அலைகள் பொருந்திய தாமிர பரணியையுடைய, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்புளிய் குடி என்னும் திவ்விய தேசத்தில் சயனத் திருக்கோலம் கொண்டிருப்பவனே! உனது திருவருளையும் பெரிய பிராட்டியாரின் திருவருளையும் ஆதிகாலம் தொடங்கியே உடையோமாய்க்கொண்டு, உனது திருக்கோயிலைத் திருவலகிடுதல் முதலிய தொண்டுகளைச் செய்து, தொன்று தொட்டு வமிச பரம்பரையாக வந்து அடிமை செய்கின்ற அடியவர்களாகிய எங்களுக்குத் திருவருள் செய்து, பிரகாசம் பொருந்திய திருவாயைத் திறந்து வார்த்தை களைப் பேசி, உனது தாமரைக் கண்களால் நோக்கி அருள வேண்டும்" என்கின்றார். இந்தப் பாசுரத்தின் உரையில் இரண்டு ஐதிகங்கள் காட்டப்பெறுகின்றன. 3. திருவாய்.9.2:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/516&oldid=921342" இலிருந்து மீள்விக்கப்பட்டது