பக்கம்:வைணவ உரைவளம்.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 வைணவ உரைவளம் ஐதிகம்-1 கின்கோயில் சீய்த்து : திவ்விய தேசங்களில் பண்ணும் கைங்கரியங்களில் தலையாயது இது. கடைத் தலைச் சீய்க்கப் பெற்றால் கடுவினைகளையலாமே" என்று மேலும் அருளிச் செய்வர். திருவலகிடுதல், மெழுகுதல், கோலமிடுதல் முதலியன செய்தலையே கோயில் சீய்க்கை' என வழங்குவர். இங்கே ஈட்டில் திருக் கண்ண மங்கை யாண்டானின் இதிகாசம் ஒன்றுள்ளது. அஃது இது; திருக் கண்ண மங்கையாண்டான் திருக் கண்ண மங்கை என்னும் திவ்விய தேசத்திலே ஒரு மகிழ மரத்தடியிலிருந்து, சருகைத் திரு அலகிடா நிற்க, கூடவாசித்து நாத்திகனாயிருப்பான் ஒருவன் பகவான் உபாயம், நாம் வேறு பயன் கருதாத வர்கள், இப்போது செய்யும் இப்பணிக்குப் பயன் என்ன?" என்றானாம். அப்போது திருக்கண்ண மங்கையாண்டான் திரு அலகு இட்ட இடத்தையும், திருஅலகு இடாத இடத் தையும் காட்டி, இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாயே; இங்கொரு பலம் இல்லை என்று தோற்றி யிருந்ததோ?’ என்று பணித்தாராம்; இங்கு அறிய வேண்டுவதாவது; நேரில் காணும் பயன் என்றும், நேரில் காணாப் பயன் என்றும் பயன் இருவகைப் படும். சந்நிதி வாசலை அலகிடுதல் முதலிய திருப்பணிகளை ஒரு பயன் கருதாது செய்வதனால் ஒரு குறையும் இல்லை; இது பயனற்றது என்று கருதுதல் வேண்டா; திருவலகிடாத இடம் கண்கொண்டு காண வொண்ணாததாயும், திருவல கிட்ட இடம் கண்ணாற் காண இனிதாயிருப்பதே பயன். ஐதிகம்-2, தாமரைக் கண்களால் நோக்காய் : வார்த்தை யிலே தோற்றாத அன்பும் நோக்கிலே அநுபவிக்கும்படி குளிர நோக்கி அருள வேண்டும். கோயிலில் (திருவரங்கத் தில்) பிள்ளை தேவப் பெருமாள் அரையர் இப்பசுரத்தைச் சேவிக்கையில் உன் தாமரைக் கண்களால் நோக்காய்" என்று ஒரு தடவை சொல்லி நிறுத்தாமல் நோக்காய், 6. திருவாய். 10.2:7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/517&oldid=921343" இலிருந்து மீள்விக்கப்பட்டது