பக்கம்:வைணவ உரைவளம்.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 வைணவ உரைவளம் விசாலமான உலகம்; இதனுளும்-திருப்புளிங் குடியிலும்; வீற்று இடம்கொண்டு - உனது மேன்மை இடங்கொண்டு தோன்றும்படி: ஒருநாள் இருந்திடாய்-ஒரு நாளாவது இருந் திடல் வேண்டும்.1 எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறை இல்லாமல் அருளிமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுவதைக் கூறும் திருவாய்மொழியிலுள்ளது இப் பாசுரம். இதில் ஆழ்வார், சந்திரன் வந்து தங்கும்படி உயர்ந்திருக்கின்ற மாடங்களையுடைய திருப்புளிங்குடியில் சயனித்திருக் கின்றவனே! திருவைகுந்தத் து'2 நின்ற கோலமாய் எழுந் தருளி இருப்பவனே! தேவனே! எங்கள் கண் முன்னே, உலகத்தினர் எல்லாரும் இரண்டு திருவடிகளையும் தொழு வதும் எழுவதுமாய் இருந்து வணங்கித் தங்களுடைய பக்திக்குத் தகுதியாக ஒவ்வொருவரும் தாம்தாம் சொல்லக் கூடிய அளவிலே அவர் அவர்கள் மேல் விழுந்து துதித்து மிகவும் கொண்டாட, இடமகன்ற பெரிய இந்த உலகத்தில் இந்தத் திருப்புளிங் குடியிலும் இடம் கொண்டு உனது மேன்மை தோன்ற ஒரு நாளாவது இருந்தருள வேண்டும்' என்கின்றார். 'தங்களன்பாரத்...பூசிப்ப' : தங்கள் பக்திக்கு மிக்குவர தமது ஆற்றலுக்குத் தகுந்த சொற்களாலே, அல்லது தாம் தாம் சொல்லவல்ல அளவுகளாலே என்னுதல், அந்தப் புராண புருஷனைப்பற்றி நான் அறிந்த அளவு சொல்லு கின்றேன்' என்பது நாராயணியம்...அறிந்த அளவு சொல் லுகைக்குக் காட்டப்பெறும் ஐதிகம் : வங்கிபுரத்து நம்பி பெருமாளைச் சேவிக்க எழுந்தருளின அளவிலே ஒரு பக்கத் தில் பூரீவைணவர்களும் மற்றொரு பக்கத்தில் ஆய்ச்சிகளும் நின்றுகொண்டு பெருமாளைச் சேவித்திருந்தார்களாம்; வங்கிபுரத்து நம்பி பூரீவைணவவர்கள் நிற்கிற பக்கமாக 12. வைகுண்டம் என்னும் திருப்பதியில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/521&oldid=921348" இலிருந்து மீள்விக்கப்பட்டது