பக்கம்:வைணவ உரைவளம்.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 499 நில்லாமே ஆய்ச்சிகள் பக்கமாக நின்றாராம்; அதை முலிதயாண்டான் கண்டு 'இதென்ன? பூரீவைணவர்கள் திரளில் சேராமல் ஆய்ச்சிகள் பக்கமாக நிற்கிறதேன்?" என்று கேட்டாராம். அதற்கு நம்பி சொன்னாராம்எப்படியும் நாம் பலவகை அபிமானம் கொண்டு அகங்கார மமகார யுக்தர்களாக இருப்போம்; நம்மேல் பகவத் கடாட்சம் பாய்வது மேட்டு மடையாகவே இருக்கும்; அவர்கள் அறிவொன்றுமில்லாத ஆய்ச்சியர்கள் ஆகை யாலே உண்மையில் தாழ்ச்சியுடையவர்களாயும் தாழ்ச்சி தோற்றப் பேசும வர்களாயு மிருப்பவர்களாகையாலே அவர்கள்மேல் பகவத் கடாட்சம் பாய்வது பள்ளமடையா யிருக்குமென்று அவர்கள் பக்கமாக நின்றேன்' என்று. ஆனாலும், எம்பெருமானை நோக்கி ஆய்ச்சிகள் போற்றும் படியையும் நம்பி போற்றும் படியையும் ஆண் டான் கண்டவரா கையாலே இந்த வாசியை (வேற்று மையை) எடுத்துக்காட்ட வேண்டும் என்று திருவுள்ளம் பற்றி நம்பியை நோக்கிக் கேட்டாராம் - ஆய்ச்சிகள் சொன்னதென்? தேவரீர் அருளிச் செய்ததென்!" என்று. 'பொன்னாலே பூணு நூலிடுவீர், நூறுபிராயம் புகுவீர், அழுத்த விரட்டையுடுப்பீர், பழம் உண்பீர், பால் உண்பீர் என்பனபோன்று ஆய்ச்சிகள் சொன்னது; விஜயஸ்வ, விஜயீபவ இத்யாதிகள் அடியேன் சொன்ன வார்த்தை' என்று நம்பி சொல்ல, அதற்கு ஆண்டான் அங்குப்போயும் முரட்டு சமஸ்கிருதம் விட்டீரில்லையே; எங்கேயிருந்தாலும் நாம் நாமே; இங்கே எழுந்தருள்வீர்' என்று அருளிச் செய்தாராம். இதுதான் தங்களன்பாரத் தமது சொல்வலத்தால் பூசிப்பது". அது தன்னிலும் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப தாவது'-ஒருவருக்கொருவர் மேல் விழுந்து மிகவும் ஆச்ர யித்துக் கொண்டாடுவது. இப்படிப்பட்ட சந்நிவேசங்களை யெல்லாம்' ஆழ்வார் காண விரும்புகிறபடி, 13. சந்நிவேசங்கள்-நிலைகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/522&oldid=921349" இலிருந்து மீள்விக்கப்பட்டது