பக்கம்:வைணவ உரைவளம்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 501 அவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது' என்றுள்ளது. அதாவது, கோயிலாய்த்தான் என்பவர் பட்டரையே தெய்வமென்று நினைத்திருந்தவர், அவர் தமக்குப் பிறந்த பிள்ளைக்கு பட்டர்’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்தப் பிள்ளை தெய்வாதீனமாக ஆசாரியன் திருவடி சார, தந்தை பட்டர் பக்கலிலே வந்து கதறியழ, பட்டரும் நீ நம்முடைய திருப்பெயரிட்ட பிள்ளை போனா னென்றன்றோ துக்கப்படுகின்றாய்; அதற்குத் துக்கப்பட வேண்டா; அந்தத் திருப் பெயரை யுடைய நாம் இருக்கத் துக்கப்படுவானேன்?' என்று அருளிச் செய்தார். பின்னர் தம்மைப்போலே ஒரு விக்கிர கத்தை ஏறி அருளப் பண்ணி அவருக்குக் கொடுத்தருளி னார் என்பது சரிதம். திருநாமமுடைய எம்பெருமான் நிலை நின்றிருந்து நம்மைக் காத்தருள்பவன் என்பதை வற்புறுத்தும் இந்த சம்வாதம்.' 234 மனமே! உன்னை வல்வினையேன் இரந்து கனமே சொல்லினேன் இதுசேரல் கண்டாய் புனமே வியபூங் தண்துழாய் அலங்கல் இனமே தும்இ லானை அடைவதுமே.”* (வல்வினையேன் - கொடிய வினையேனாகிய நான்; இரந்து-வேண்டி, சோரேல்-நழுவ விடாதே; புனம் மேவிய-தன் நிலத்தில் வளர்ந்த, அலங்கல்-மாலை; ஏதும்-ஒரு விதத்திலும்; இனம்இலான்-ஒப்பில்லாதவன்; அடைவதும்-கிட்டவேணும் என்கிற இது தான்! 13. சம்வாதம்-தர்க்கம், சம்பாஷணை,உரையாடல், 16. திருவாய். 9.3:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/524&oldid=921351" இலிருந்து மீள்விக்கப்பட்டது